நம் நாடு முழுவதும் கர்ப்பிணி பெண்களுக்கு என்று பல முக்கிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் செய்யப்பட்டு தான் வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவிலான திட்டத்தங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தொடங்கப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் இந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம். இந்த திட்டமானது பல பெண்களுக்கு உதவிகரமாக உள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த திட்டம் (Pregnant Lady schemes in Tamilnadu) பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Financial Assistance Scheme) மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்க்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழகத்தில் ஒரு பெண் தான் கருவுற்றதும் அவர் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தனது பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த பெண் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு சுகாதாரத் துறையின் மூலம் தனியாக உருவாக்கப்பட்டிருக்கும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவர்களுடைய அடையாளங்கள் மற்றும் அவருடைய விவரங்களை பதிவேற்றும் செய்ய வேண்டும்.
சுகாதார துறையின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கர்ப்பிணி பெண்ணின் ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் அந்த பெண்ணின் அடையாளங்கள் உள்ளிட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பிறகு இந்த திட்டத்திற்கு கீழ் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் நிதியுதவி என அனைத்தும் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு வழங்கப்படும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியானது இதுவரை 5 தவணைகளாக வழகங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த நிதியுதவியானது வெறும் மூன்று தவணைகளாக வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் (Pregnant Women scheme in Tamilnadu) படி, கர்ப்ப காலத்தின் 4-வது மாதத்தில் ரூ.6,000 வழங்கப்படும். அதன் பிறகு குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6,000 வழங்கப்படும். குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2,000 வழங்கப்படும். மொத்தமாக இந்த திட்டத்தின் கீழ் ரூ.14,000 ரொக்கமாக வழங்கப்படும். மேலும் 3-வது மாதம் மற்றும் 6-வது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது
4-வது மாதம் | ரூ.6,000 |
குழந்தை பிறந்த 4-வது மாதத்தில் | ரூ.6,000 |
9-வது மாதம் | ரூ.2,000 |
இதையும் படியுங்கள்: கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 11000 நிதியுதவி..! மத்திய அரசு அறிவிப்பு..! |