நாம் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள் ஆவோம். எனவே பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதலுக்கான திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இதற்கு முன்பாக பிறப்பு சான்றிதழில் (Birth Certificate) குழந்தையின் மதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட பிறகு பிறப்பு பதிவேட்டில் இனி குழந்தையின் தாய் மற்றும் தந்தை என இருவரின் மதத்தையும் தெரிவிப்பது கட்டாயம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த திருத்த மசோதா பற்றியும் பிறப்பு சான்றிதழ்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் திருத்த மசோதாவை மாநில அரசு ஏற்றுக்கொண்டது.
இதன்படி தற்போது புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளது பிறப்பு பதிவு சான்றிதழில் படிவம் 1 னில் சில மாற்றங்கள் (Changes in Birth Certificate) கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த படிவத்தில் தாய் மற்றும் தந்தையின் மதம் என்ன? என்று தனித்தனியே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் தங்களின் மதம் என்ன என்பதை பெற்றோர்கள் நிரப்ப வேண்டும். மேலும் இந்த விதிமுறைகள் குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கோடைகாலத்தில் வெயிலை விட அதிகரிக்கும் AC மின் கட்டணம்… செலவை குறைக்க எத்தனை Ton AC வாகங்க வேண்டும்… |