Homeசினிமாமகிழ்சியில் திரைப்பட ரசிகர்கள்... தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்கள்...

மகிழ்சியில் திரைப்பட ரசிகர்கள்… தமிழ் புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்கள்…

பண்டிகை என்றாலே அனைவருக்கும் சந்தோசம் தான். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பண்டிகை நாட்களில் அவர்களின் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுவார்கள். இதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது போன்ற பண்டிகை நாட்களில் அனைத்து தொலைக்காட்சிகளும் புது புது படங்களில் அவர்களின் தொழைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள்.

வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் வருடப் பிறப்பு தமிழ் மக்களால் கொண்டாடப்பட உள்ள நிலையில் பல தொலைக்காட்சி சேனல்களில் புதிய புதிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் எந்த எந்த புதிய படங்கள் எந்த சேனலில் ஒளிபரப்பாக (Tamil Puthandu Thiraipadangal) உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

அயலான்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அயலான் (Ayalaan) திரைப்படம், ஒரு ஏலியன் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (New Movies in Tamil New Year 2024) மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

வடக்குப்பட்டி ராமசாமி

நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் தான் வடிக்குப்பட்டி ராமசாமி (Vadakkupatti Ramasamy). இந்த படதம் ஒரு காமெடி திரைப்படம் ஆகும். இந்த படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இந்த படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் சந்தானமுடன் இணைந்து மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, லொள்ளு சபா சேஷு, மொட்டை ராஜேந்திரன், நஜான் விஜய், வரி மரியா, கூல் சுரேஷ் போன்ற பலர் நடித்தனர். இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

பொன் ஒன்று கண்டேன்

அசோக் செல்வன், வசந்த் ரவி, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் தான் பொன் ஒன்று கண்டேன். இந்த படத்தின் இயக்குனர் பிரியா. அவர் கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி போன்ற படங்களை இயக்கியவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் இயக்கிய பொன் ஒன்று கண்டேன் திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (Tamil Varuda Pirappu Thiraipadangal) வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

பகவந்த் கேசரி

New Movies in Tv

நந்தமுரி பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால், அர்ஜூன் ராம்பால், ராகுல் ரவி, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்த தெலுங்கு திரைப்படம் பகவந்த் கேசரி (Bhagavanth Kesari). இந்த படத்தின் இயக்குனர் அனில் ரவிபுலி. இந்த திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் படிக்க: காதலர்களால் விரும்பப்படும் Family Star..! வசூல் எவ்வளோனு சென்னா ஷாக் ஆகிடுவீங்க..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular