இன்றைய காலக்கட்டத்தில் சுற்றுசூழல் அதிகமாக மாசுபாடு அடைந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முதன்மையான காரணம் என்றால் அது வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை தான். தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்து விட்டது. இதற்காக தான் அதிக புகையை வெளிப்படுத்தும் பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை (Low Price Electric Scooter) அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த எலக்ட்ரிக் டூவீலர்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனினும் பலர் இந்த வாகனங்களை அதிக விலை காரணமாக வாங்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் தான் தற்போது வெறும் 36,990 ரூபாய்க்கு புதிய எலெக்ட்ரிக் டூவீலரை (NGE Raakit 100 Electric Scooter) பிரபல நிறுவனம் ஒன்ற அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
நொய்டாவை தலைமை இடமாகக் கொண்ட நிறுவனம் தான் நெக்ஸ்ஜென் எனர்ஜியா. இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் டூ வீலரை (New Electric Two Wheeler) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூவீலர் நேற்று வெறும் ரூபாய் 36,990 என்ற விலையில் NGE Raakit 100 வாகனங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் டூவீலரை நடிகர் சுனில் ஷெட்டி தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இந்த எலெக்ட்ரிக் டூவீலர் அறிமுகத்திற்கு பிறகு இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, எலெக்ட்ரிக் வாகனங்களை குறைவான விலையில் எளிய மக்களும் வாங்கும் வகையில், தயாரிப்புகளை உருவாக்க எங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ. 36,990 என்ற குறைந்த விலையில் எலெக்ட்ரிக் டூவீலர்களை (NGE Raakit 100 Electric Scooter Price) அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் சேர்மன் பியூஸ் கூறியதாவது, எங்கள் நிறுவனத்தின் நோக்கம் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாங்கும் அளவிற்கு குறைவான விலையில் இருக்க வேண்டும் என்பது தான். அதே நேரம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து வசதியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் எங்கள் நிறுவனம் இந்த நிதியாண்டில் சுமார் 500 கோடி அளவிற்கு பண பரிமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் 500 டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இதனால் 50,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வழங்க உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த டூவீலர் மூலம் அனைவரும் குறைந்த விலையில் எலக்ட்ரிக் டூவீலர் வாகனங்கள் வாங்க இயலும். மேலும் இதன் மூலம் மக்கள் பலர் பயனடைவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Plasma X Electric Scooter: இத விட கம்மி விலையில் யாராலும் தர முடியாது..! கொஞ்ச நாளைக்கு தான்..! மிஸ் பண்ணிடாதிங்க..! |