இந்தியாவில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்துக் கட்சிகளும் அவர்கள் வேட்பாளர்களை வெற்றியடைய செய்வதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில சுயேச்சை கட்சிகள் அவர்களின் சின்னத்தையும் மக்களிடம் சேர்க்க வேண்டிய பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். இந்த கட்சி வழக்கம் போல் தனித்தே தேர்தலில் போட்டியிடுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவை தொகுதியிலும் தலா 20 பெண் வேட்பாளர்கள் மற்றும் 20 ஆண் வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி (Naam Tamilar Katchi).
முதலில் இந்த கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் அவர்களுக்கு கிடைக்க வில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தேர்தல் ஆணையம் இவர்களுக்கு மைக் சின்னத்தை (Mic Chinnam) ஒதுக்கியது. இந்த சின்னத்தை மக்களிடம் சேர்த்து அவர்கள் வேட்பாளர்களை வெற்றியடைய செய்ய கட்சி தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் படம் மற்றும் கட்சி சின்னம் ஒட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஸ்விட்ச் இருக்கும் மைக் சின்னம் அந்த வாக்கு பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு தரப்பட்ட சின்னம் ஸ்விட்ச் இல்லாத மைக். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புகார் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஸ்விட்ச் இல்லாத மைக் சின்னம் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னமாக மாற்றி ஒட்டப்பட்டுள்ளது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாதகவினர் புகார் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு இந்த தேர்தலில் பெரிய பிரச்சனையாக அவர்கள் கட்சி மைக் சின்னம் (Mic Chinnam Problam) உருவாகி உள்ளது.
மேலும் படிக்க: அதிமுக வெற்றி பெற பால்குடம் எடுத்த காமெடி நடிகர்..! |