புதிய ₹20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என RBI அறிவித்துள்ளது. ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் வரும் இந்த நோட்டுகள், பழைய நோட்டுகளுடன் இணையாக புழக்கத்தில் இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), புதிய வடிவமைப்புடன் ₹20 நோட்டுகளை விரைவில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த புதிய நோட்டுகள், முந்தைய வடிவமைப்பையே தொடர்ந்து கொண்டாலும், தற்போது பதவியேற்றுள்ள ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் வெளியிடப்படவுள்ளன.
நோட்டுகளின் முக்கிய அம்சங்கள்:
புதிய ரூ.20 நோட்டுகள் அதே அளவு, வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்தாலும்
முக்கிய மாற்றம்: RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம்
RBI சட்டம் 26(2)-ன் படி, இந்த புதிய நோட்டுகள் சட்டப்படி செல்லுபடியானவை எனவும்,
மக்கள் இதனை எந்த சந்தேகமும் இல்லாமல் ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பழைய நோட்டுகள் என்ன ஆகும்?
தற்போதைய ரூ.20 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருப்பதால்,
➤ மாற்றம் செய்ய தேவையில்லை
➤ பழைய நோட்டுகள் செல்லுபடியாகவே இருக்கும்
மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் RBI உறுதி அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நோக்கம்:
- பணப்புழக்கத்தினை சீரமைத்தல்
- பாதுகாப்பு அம்சங்களை புதுப்பித்தல்
- புதிய ஆளுநரின் தொடக்க அடையாளம் செலுத்தும் நோக்குடன் இந்த புதுப்பிப்பு நடைபெறுகிறது.