Homeதொழில்நுட்பம்Whatsapp New Update: ஒரு வருடத்திற்கு முன்பு உள்ள மெசேஜை கூட ஒரு நொடியில் பார்க்கலாம்..!...

Whatsapp New Update: ஒரு வருடத்திற்கு முன்பு உள்ள மெசேஜை கூட ஒரு நொடியில் பார்க்கலாம்..! அது எப்படி?

மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று தான் வாட்ஸ் ஆப். இந்த ஆப் மூலம் மக்கள் பல விதமான தகவல்களை எளிமையாக பகிர்ந்துக் கொள்கின்றனர். மேலும் அதிக அளவிலான மக்கள் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். எனவே இந்த நிறுவனமும் மக்களுக்கு தேவையான அனைத்து வகையான புதிய அப்டேட்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே தான் உள்ளது.

இந்த வரிசையில் தான் தற்போது ஒரு புதிய அப்டேட்டை (New Update in Whatsapp) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம் வாட்ஸ்ஆப் பயனர்கள் இனி பழைய மெசேஜ்கள் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்யாமல் குறிப்பிட்ட தேதியில் சென்று பார்த்து கொள்ளலாம்.

இந்த புதிய அப்டேட் (New Update) குறித்த தகவல்களை இனி பார்க்கலாம். நாம் இதுவரை நீண்ட நாட்களுக்கு முன்பு அனுப்பிய வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி, புகைப்படம், அல்லது வீடியோக்களை பார்க்க வேண்டும் என்றால் தேட வேண்டும் என்றால் நாம் நீண்ட நேரம் ஸ்க்ரோல் செய்து பின்பு தான் பார்கலாம்.

ஆனால் இதற்கு நேரம் அதிகம் தேவைப்படும். இது பலருக்கு கோபத்தை தான் கொடுக்கும். இந்த பிரச்சனையை சரிசெய்ய தான் தற்போது இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலம் நாம் ஓரிரு வினாடிகளில் எந்த தேதியில் உள்ள பார்க்க வேண்டுமோ அதனை வைத்து நாம் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த அம்சமானது இதற்கு முன்பு iOS, Mac Desktop மற்றும் WhatsApp Web ஆகியவற்றில் இருந்தது. ஆனால் இப்போது ஆண்ட்ராய்டு பயனர்களும் இதைப் பயன்படுத்தலாம். இதனை நீங்கள் பயன்படுத்த வேண்டும் எனில் முதலில்

  • உங்கள் தனிப்பட்ட நபர் அல்லது குழுக்களுக்கு செல்லவும்.
  • தனிப்பட்ட நபரின் பழைய மெசேஜ் பார்க்க முதலில் அந்த நபரின் ப்ரொபைல் செல்லவும்.
  • அங்கு search பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு search பட்டனில் வலது புறம் Calendar போன்ற ஐகான் தோன்றும்.
  • அதன் பிறது அந்தத் ஐக்கானில் எந்தத் தேதிக்கான மெசேஜ் , புகைப்படம், வீடியோவை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்தத் தேதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அதன் பின்பு நீங்கள் குறிப்பிட்ட தேதியின் மெசேஜ் , புகைப்படம், வீடியோ என்று அனைத்தையும் நீங்கள் பார்க்க முடியும்.
New Whatsapp Update

இந்த புதிய அம்சம் (Whatsapp Update) நிச்சயம் பல பயனர்களுக்கு பிடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் பயனர்களுக்கு மெசேஜ், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றைத் தேடும் நேரத்தை கண்டிப்பாக மிச்சப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படியுங்கள்: நுரையீரலில் இருந்து அகற்றப்பட்ட கரப்பான் பூச்சி..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular