உலக அளவில் அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் முக்கிய இடத்தில் உள்ள ஆப் தான் வாட்ஸ் ஆப். இந்த ஆப் மிகவும் பிரபலமான ஆப் ஆகும். மேலும் இது மெட்டா நிறுவனத்தின் பிரபலமான ஆப் ஆகும். சமீபத்தில் கூட வாட்ஸ் ஆப்பில் சேட்டை லாக் செய்யும் அப்டேட்டை வெளியிட்டது. தற்போது மற்றுமொரு புதிய அப்டேட்டை (Whatsapp New Update) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது, புதிய அப்டேடாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட் ட்ரே (Redesigned Status Update Tray) என்று அழைக்கப்படும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம் நமது நாம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை வெளியிலிருந்து கொண்டே பார்க்கலாம். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப் சேனல்கள் மற்றும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்கள் ஆகிய இரண்டையும் நாம் ஒரே டேபிலிருந்து பார்க்கலாம்.
இந்த புதிய அப்டேட் மூலம் நாம் எளிமையாக நம்முடைய நண்பர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை பார்க்கலாம். மேலும் இந்த அப்டேட்டை மெட்டா நிறுவனமானது இப்போது ஆண்ட்ராய்டு 2.24 மற்றும் 2.23-க்கான வாட்ஸ் அப் பீட்டாவில் சோதனை கட்டத்தில் வைத்துள்ளனர்.
எனவே இந்த Redesigned Status Update Tray அப்டேட் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த அப்டேட் முதலில் ஆண்ட்ராய்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் ஆப்பில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் பலர் இதனை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் வாட்ஸ்அப்பில் விரைவில் கொண்டுவரப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்: Whatsapp New Update: இந்த அப்டேட் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க..! |