சில வருடங்களாக குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. அதிலும் பெண் குழந்தைகள் கடத்தல் மிகவும் அதிகமாக உள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது. 3 நாட்களாக காணாமல் போன 9 வயது சிறுமியின் உடல் சடமாக மீட்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சோலைநகா் பாடசாலை வீதியைச் சோ்ந்தவா் தான் நாராயணன். இவருடைய மகள் தான் சிறுமி ஆர்த்தி. இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை (02.03.2024) மாலை தனது வீட்டின் அருகே விளையாடச் சென்றுள்ளார். ஆனால் அவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து அவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவரும் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே போலீசில் புகார் (Missing Girl Arthi Case) அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செயது சிறுமியைத் தேடி வந்தனர்.
இதைத்தொடர்ந்து சோலைநகர் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் சிறுமி சோலை நகரில் இருந்து வெளியே செல்லும் காட்சி இடம்பெறவில்லை. எனவே போலீசார் அப்பகுதியை சுற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்கு நாட்களாக சிறுமியை காணாததால், சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்காத காரணத்தினால் போலீசார் அலட்சியமாக செயல்படுகின்றனர் என்று கூறி சோலைநகர் பொதுமக்கள் நேற்று முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான் அந்த சிறுமியின் வீட்டின் அருகே அம்பேத்கர் என்ற பகுதியில் பாதாள சாக்கடை உள்ளது. அதில் ஒரு மூட்டை மிதப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது. எனவே அங்கு சென்று போலீசார் சோதனை செய்துள்ளனர்.
அந்த மூட்டையில் இருந்தது காணாமல் போன சிறுமி ஆர்த்தியின் உடல் (Girl was Rescued as a Dead Body) என்பது தெரியவந்துள்ளது. அந்த உடல் போர்வை மற்றும் வேட்டியால் சுற்றி சாக்கடையில் வீசப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமி கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டாரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: Koffee With DD: நிகழ்ச்சியை திடீரென முடித்தது ஏன்? மனம் திறந்த DD..! |