நடப்பு ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31.01.2024) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று (01.02.2024) நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் (Interim Budget 2024) செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள காரணத்தால் இந்த அரசு இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தலுக்கு பின்பு அமையும் புதிய அரசு மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் வர இருப்பதால். இந்த இடைக்கால பட்ஜெட் மக்களை கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி குறைப்பு, வருமான வரி செலுத்துவோருக்கு சலுகைகள் மற்றும் தொழில் முனைவோருக்கு சலுகை போன்ற பல எதிர்பார்ப்புகள் இந்த Interim Budget மீது மக்களுக்கு உள்ளது.
இன்று காலை 11 மணி அளவில் 2024-2025 ஆண்டிர்காகன இடைக்கால பட்ஜெட் (Interim Budget Today) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது இவர் தாக்கல் செய்யும் 6 வது பட்ஜெட் ஆகும். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) பதவி ஏற்றார். 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இவர் இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவரே இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Nirmala Sitharaman இது வரை 5 முழு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இது 6 வது முறையாக இவர் தாக்கல் செய்யும் பட்ஜெட் ஆகும். இதற்கு முன்பாக Morarji Desai மட்டுமே ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இன்று நிர்மலா சீதாராமனும் 6 வது முறையாக Budget தாக்கல் செய்வதன் மூலம் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார் என்பது கூறிப்பிடதக்கது.
2024 ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்ய உள்ளதால். இது மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் ஏதேனும் இருக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இந்த பட்ஜெட் என்பது மத்திய அரசின் வரவு மற்றும் செலவு திட்டங்களை அடிப்படையாக கொண்ட அறிக்கயாகவே இருக்கும் என பொருளாதார நிபுனர்கள் கூறுகின்றனர்.