Homeசெய்திகள்நீதா அம்பானியின் நெக்லஸ் விலை எத்தனை கோடி தெரியுமா?

நீதா அம்பானியின் நெக்லஸ் விலை எத்தனை கோடி தெரியுமா?

பிரபல தொழிலதிபராகவும் உலக பணக்காரர் பட்டியலில் ஒருவராக இருப்பவர் தான் முகேஷ் அம்பானி. இன்னும் சில மாதங்களில் இவருடைய இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் தொடங்கியுள்ளது. இதில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானி அவரது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்காக ரூ.1260 கோடியை செலவழித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியகளுக்கே இவ்வளவு செலவு செய்துள்ளார் என்றால் திருமணத்திற்கு எவ்வளவு செலவு செய்வார் என்று அனைவரும் வியப்பில் உள்ளனர். எனவே இந்த திருமணத்திற்கு முகேஷ் அம்பானி எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் அனைத்தும் பார்ப்பவர்களையும் மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது தான் இருந்தது. அதிலும் அம்பானி குடும்பத்தினரின் உடை மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்கள் அணைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது என்று தான் கூறவேண்டும். இதில் அதிகமாக பேசப்பட்டது நீதா அம்பானி அணிந்திருந்த புடவை மற்றும் நெக்லஸ் தான்.

சாதாரணமாக நாட்களிலேயே நீதா அம்பானி அணியும் உடை மற்றும் அவருடைய ஆபரணங்கள் அதிக விலை உடையதாக தான் இருக்கும். இப்போது அவரின் மகன் திருமணம் என்றால் செல்லவா வேண்டும். இந்நிலையில் தான் அவர் ஆனந்த் – ராதிகா திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டத்தின் மூன்றாவது நாளில் அணிந்திருந்த பெரிய மரகத பச்சை நெக்லஸ் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

Nita Ambani Necklace

இந்நிலையில் தான் தற்போது அந்த நெக்லஸின் விலை (Nita Ambani Necklace Price) குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த மரகத பச்சை நெக்லஸ் மதிப்பு ரூ.400 முதல் 500 கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த தகவல் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: I am Lost: நயன்தாராவின் புதிய பதிவால் பரபரப்பு..! என்ன காரணம்?
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular