NLC Recruitment 2024: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) -ல் 2024 ஆம் ஆண்டின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி தொழில்துறை பயிற்சியாளர் பதிவ காலியாக உள்ளது. இந்த பதவிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பதிவிட்டுள்ளோம்.
மத்திய அரசு பணியில் சேர விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC Job Notification in Tamil) -ன் அறிவிவப்பின் படி தொழில்துறை பயிற்சியாளர் பதவிக்கான 239 காலி பணியிடங்கள் உள்ளன.
இந்த Industrial Trainee வேலை வாய்ப்பு பற்றிய விவரம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (NLC) -ன் அதிகாரபூர்வ www.nlcindia.in இணையதள பக்கத்தில் (NLC Official Website) பதிவிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
NLC Recruitment 2024 Official Notification -ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த 239 தொழில்துறை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு, ஐடிஐ (இன்ஜினியரிங்) அல்லது டிப்ளமோ முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த தொழில்துறை பயிற்சியாளர் பதவிக்கு (Industrial Trainee) மாதம் சம்பளம் ரூபாய் 14,000 முதல் 18,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 40 எனவும், விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து முறை தேர்வு நடத்தி தகுதி உள்ளவர்கள் 239 தொழில்துறை பயிற்சியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NLC – ன் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் – ன் அதிகாரபூர்வ அறிவிப்பை (NLC Official Notification 2024) படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
NLC Notification 2024 -ன் படி இந்த தொழில்துறை பயிற்சியாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் 20.03.2024 முதல் 19.04.2024 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தொழில்துறை பயிற்சியாளர் வேலைக்கு ஆன்லைனில் அப்ளை செய்வதற்கு NLC -ன் அதிகாரபூர்வ இணையதளம் சென்று அதில் வேலைவாய்ப்பு பக்கத்தில் உள்ள அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
[rank_math_rich_snippet id=”s-979837ef-f36a-4f13-94ad-ac87ebca1cc2″]