அசைவம் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்றுதான் சிக்கன் மஞ்சூரியன். ஆனால் இது அசைவம் என்பதால் இதே சுவையை சைவ பிரியர்களும் உண்ண வேண்டும் என்பதற்காக இந்த சிக்கன் மஞ்சூரியக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட உணவு தான் இந்த கோபி மஞ்சூரியன். இது கடந்த 1975-ம் ஆண்டில் அறிமுகமாகப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது இது நாடு முழுவதும் உள்ள பல மக்களின் விருப்ப உணவாக மாறிவிட்டது.
இந்த கோபி மஞ்சூரியன் வேகவைத்த காலிஃபிளவருடன் சோளமாவு மற்றும் அரிசிமாவு ஆகியவற்றை கலந்து, எண்ணெயில் பொரித்து அதனுடன் சாஸ் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்து ஒரு கிரேவி போல தயார் செய்வது தான் இந்த கோபி மஞ்சூரியன்.
ஆனால் இந்த உணவில் சிக்கன் மஞ்சூரியன் போல் சுவையை வரவைக்க அதில் பல விதமான மசாலாக்கள் மற்றும் செயற்கை நிறங்கள் அகியவை கலக்கப்படுகிறது என்றும் இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தது.
கர்நாடகா மாநிலத்தில் கோபி மஞ்சூரியனில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரோடமைன்-பி என்னும் நிறமூட்டி கலக்கப்படுவதாக கூறி அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் உணவு பொருட்களில் ரோடமைன்-பி செயற்கை நிறமூட்டிகள் கலக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் கோபி மஞ்சூரியனுக்கு தடை இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தால் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: இந்த வெயிலுக்கு ஜில்லுனு தர்பூசணி சர்பத் செய்வது எப்படி..! 5 நிமிடம் போதும்..! |