தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வுகள் தொடங்கி கடந்த ஏப்ரல் 8 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. அதன் பின்னர் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் முடியும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனினும் ரமலான் பண்டிகை விடுமுறை காரணமாக சிறிய மாற்றம் செய்ய பட்டது.
இதன் படி வரும் ஏப்ரல் 23-ஆம் தேதியும் தேர்வு முடிவடையவுள்ளது. எனவே இந்த கோடை விடுமுறை தொடங்க இன்னும் 6 நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது கோடை விடுமுறை குறித்த முக்கிய தகவல் (School Reopen Date) வெளியாகியுள்ளது. வழக்கமாக மே மாதம் 31 நாட்களும் விடுமுறை (Summer Holiday) தான். அதன்பிறகு ஜூன் முதல் வாரத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படும்.
வருடாவருடம் ஜூன் மாதம் ஒன்று அல்லது 2-ம் தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமிருந்ததால் பள்ளிகள் திறப்பு தாமதமானது. இரண்டு முறை தள்ளிப் போன நிலையில் ஜூன் 12ஆம் தேதி 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் ஜூன் மாதம் 14ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதை வைத்துப்பார்க்கும் போது இந்த வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக தான் உள்ளது. எனவே பள்ளிகள் திறக்க தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதற்க்கிடையில் ஜூன் மாதம் 4-ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே அதன்பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்பது நாம் அறிந்த ஒன்றே.
இந்த நிலையில் தான் தனியார் பள்ளிகள், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த ஒரு தகவலை பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் (School Reopen Date After Holiday) வெளியாகியுள்ளது. அதன்படி 1-9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 6-ம் தேதியும், LKG, UKG வகுப்புகளுக்கு ஜூன் 17-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஜூன் முதல் வாரத்தில் இருந்தே பள்ளிகள் தொடங்கி விடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகும் பட்சத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! கோடை விடுமுறை எத்தனை மாதம் தெரியுமா? |