Homeசெய்திகள்ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ. 6000..! நிவாரணம் பற்றிய தகவல்..!

ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் ரூ. 6000..! நிவாரணம் பற்றிய தகவல்..!

கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் முக்கிய பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த புயலால் சென்னை அதிக அளவிலான பாதிப்பை ஏதிர்க்கொண்டது.

வங்கக்கடலில் கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி உருவானது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung Puyal) என்று பெயர் வைக்கப்பட்டது. மேலும் இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தான் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண நிதி (Vella Nivaranam) வழங்கவேண்டும்என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 6000 (Chennai vella nivaranam nidhi Chennai 2023) வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். மேலும் இந்த நிவாரண தொகை ரேஷன் கார்டுகள் மூலம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ரேஷன் கார்டு இல்லை என்ற குழப்பம் அப்போதே எழுந்தது. மேலும் நிவாரண நிதியானது ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் என்று கூறப்பட்டதால் ரேஷன் அட்டைஇல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா இல்லையா என்ற கேள்வி இருந்தது.

இந்நிலையில் தற்போது ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது வெள்ள நிவாரணத்திற்கு (Michaung Puyal Nivaranam) விண்ணப்பித்து அதனை கணக்கெடுக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தும் மொத்தமாக 5.5 லட்சம் பேர் நிவாரண நிதிக்காக விண்ணப்பித்துள்ளனர் என்றும் அவர்களில் தகுதியானவர்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6000 வழங்கும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Michaung Puyal Nivaranam
இதையும் படியுங்கள்: தை அமாவாசை படையலில் வைக்க வேண்டிய காய்கறிகள்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular