மத்திய அரசு ஐடிஐ படித்தவர்களுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றான இந்திய அணுசக்தி கழகத்தில் தான் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த இந்திய அணுசக்தி கழகத்தின் தலைமை அலுவலகமானது மும்பையில் அமைந்துள்ளது. எனினும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வகையில் தற்போது இந்திய அணுசக்தி கழகத்தின் கிளை நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. NPCIL Recruitment 2024-ன் படி மொத்தம் 335 காலிப்பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. இதில் ஃபிட்டர் – 94, எலக்ட்ரீசியன் – 94, எலக்ட்ரானிக் மெக்கானிக் – 94, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டெண்ட் (COPA) – 14, டர்னர் – 13, மெஷினிஸ்ட் – 13, வெல்டர் – 13 ஆகிய காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது.
இந்திய அணுசக்தி கழக ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் படி (NPCIL Apprentice Recruitment This Year) இந்த வேலைகளுக்கான பணியிடங்கள் ராவத்பாட்டா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள இந்திய அணுசக்தி நிறுவனங்களில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக் கழகத்தில் அந்தந்த டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NPCIL ஆட்சேர்ப்பு 2024-ன் படி நிரப்படவுள்ள இந்த பணியிடங்களுக்கு குறைந்த பட்ச வயதாக 14 வயது நிறைந்திருக்க வேண்டும் மேலும் அதிகபட்சமாக 24 வயதிற்கு மேல் இருக்ககூடாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் SC,ST,OBC மற்றும் PwBD பிரிவை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசின் விதிகளின் படி வயது தளர்வு சலுகைகள் வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணுசக்தி கழகத்தில் இந்த அப்ரெண்டிஸ் பதவிகளுக்கு மாத சம்பளமாக ரூபாய் 7,700 முதல் 8,855 வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. NPCIL நிறுவனத்தின் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிகளுக்கு www.npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த அறிவிப்பு குறித்த முழு தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
[rank_math_rich_snippet id=”s-fab26398-5dfe-4475-bc82-b62649bddabf”]