Homeதொழில்நுட்பம்Oneplus Watch 2: அசத்தலான பேட்டரி பேக்கப்..! ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வாட்ச் அறிமுகம்..!

Oneplus Watch 2: அசத்தலான பேட்டரி பேக்கப்..! ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய வாட்ச் அறிமுகம்..!

புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்றான ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து பல விதமான பொருட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திதான் வருகிறது. இந்த வரிசையில் தான் தற்போது தனது புதிய மாடல் வாட்ச் ஒன்றை (Oneplus New Watch Launch) அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை வாட்ச்கள் ஆகும்.

இந்த வாட்ச்சுகள் பார்சிலோனா என்னும் பகுதியில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 என்ற நிகழ்ச்சியில் ஒன்பிஸ் நிறுவனமானது தனது இரண்டாம் தலைமுறை வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2021-ம் ஆண்டு இந்த வாட்சின் முதல் தலைமுறை ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகமானது. இந்நிலையில் தான் இப்போது இதன் அடுத்த தலைமுறை வாட்ச்களான ஒன்பிளஸ் வாட்ச் 2 (Oneplus Watch 2) மாடல் வாட்கள் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த OnePlus Watch 2 மாடல்கள் அதன் முதல் தலைமுறை வாட்ச்களை விட பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. இதில் மிகவும் முக்கிய அம்சமாக நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் உள்ளது. மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்த மாடல் வாட்கள், 466 x 466 பிக்சல்கள் மற்றும் 1.43 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிஸ்ப்ளே ஆனது 600 nits வரை பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் W5 SoC உடன் BES 2700 MCU செயல்திறன் சிப்செட்டுடன் இயங்குகிறது. இந்த வாட்ச் 2GB RAM மற்றும் 32GB ரோமை கொண்டுள்ளது.

இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2 (Oneplus New Watch 2) வகையான வாட்ச்கள் 500 mAh பேட்டரியுடன் வருகிறது. மேலும் இந்த பேட்டரியை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் கிட்டத்தட்ட 100 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் குறைந்தபட்சமாக 48 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் தரும் என்று கூறப்படுகிறது. இந்த வாட்ச்சில் ஃபாஸ்ட் சார்ஜின் வசதி உள்ளது. இதன் மூலம் வெறும் 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

One Plus Watch 2

இந்தியாவில் இந்த வாட்ச்சின் விலை ரூ.24,999 ஆகும். இந்த வாட்ச் Amazon, Flipkart, Reliance, Croma மற்றும் OnePlus Experience ஸ்டோர்கள் ஆகிய ஆன்லைன் தளங்களிலும் வரும் மாரச் மாதம் 4-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே 2, 466 x 466 பிக்சல்கள் மற்றும் 1.43 இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே
பிரைட்னெஸ் 600 nits
பேட்டரி500 mAh
சார்ஜிஜ்60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ்
விலை ரூ.24,999
One Plus Watch 2

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய மாடலான ஒன்பிளஸ் வாட்ச் 2-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Product Brand: One Plus

Product Currency: INR

Product Price: 24999

Product In-Stock: InStock

Editor's Rating:
4.5
இதையும் படியுங்கள்: Samsung Galaxy Ring: இனி ஸ்மார்ட் வாட்ச்லாம் இல்ல..! ஸ்மார்ட் ரிங் தான்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular