Homeதொழில்நுட்பம்வெறும் ₹13,999-ல் 6000mAh பேட்டரி + 45W சார்ஜிங்! – ஓப்போவின் புது ரக்பேக் மாஸ்...

வெறும் ₹13,999-ல் 6000mAh பேட்டரி + 45W சார்ஜிங்! – ஓப்போவின் புது ரக்பேக் மாஸ் மாடல் வெளியீடு!

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ஓப்போ A5x 5G இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. வெறும் ₹13,999 என்ற துவக்க விலையில், இது 6000mAh பேட்டரி, 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், IP65 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளிட்ட பிரீமியம் அம்சங்களுடன் வந்துள்ளது.

இந்த மாடலில் MediaTek Dimensity 6300 6nm சிப்செட், Android 15 மற்றும் ColorOS 15 ஆகியவை இணைந்து செயல்திறனை உயர்த்துகின்றன. AI Eraser, Clarity Enhance போன்ற புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 4GB ரேமுடன் 4GB விர்ச்சுவல் ரேம் மற்றும் 128GB மெமரி கிடைக்கிறது; மேலும் 1TB வரை microSD கார்டு மூலம் விரிவாக்க முடியும்.

பின்னால் 50MP கேமரா மற்றும் IR சென்சார், முன்னால் 5MP செல்பீ கேமரா தரப்பட்டுள்ளன. MIL-STD-810H மிலிட்டரி ஷாக் ரெசிஸ்டன்ஸ், 360° ஆர்மர் பாடி, மற்றும் 7.99mm தடிமன், 193g எடை ஆகியவை கூடுதல் வலுவூட்டல்கள். 5G Dual VoLTE, Side-Mounted Fingerprint Sensor மற்றும் Dual SIM வசதியுடன் வருகிறது.

மிட்நைட் ப்ளூ மற்றும் லேசர் ஒயிட் என இரு கலர்களில் கிடைக்கும் இந்த மாடல், மே 25 முதல் ஓப்போ ஸ்டோர், Amazon மற்றும் Flipkart-ல் விற்பனைக்கு வர உள்ளது. ரூ.1,000 வரை அறிமுக சலுகையுடன் கிடைக்கும் இது, ஒட்டுமொத்தமாக ஒரு பக்கா ரக்கட் பட்ஜெட் 5G போன் எனக் கருதப்படுகிறது.

  • விலை: ₹13,999
  • விற்பனை துவக்கம்: மே 25, 2025
  • விற்பனை தளங்கள்: OPPO Store, Amazon, Flipkart
RELATED ARTICLES

Most Popular