இந்தியாவில் கடந்த 11-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா (Kudi urimai sattam thiruththa masodha in tamil) கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்த குடியுரிமை சட்டத் திருத்த (Citizenship Amendment Act) மசோதாவில், பாஜக அரசு கடந்த 2019-ல் சில மாற்றங்களை செய்தது. மேலும் இந்த திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தின் படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு தஞ்சம் தேடி வரும் இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ஆனால் இந்த திருத்தம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த போவது இல்லை என்று இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் அறிவித்துள்ளது. ஆனால் குடியுரிமை மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. எனவே மாநிலங்கள் அதனை ஏற்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.
இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த (11.03.2024) அன்று வெளியிட்டது.
மேலே குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் 2014-ஆம் ஆண்டிற்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால், அவர்கள் இந்திய குடிமகனாக மாறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் இதற்காக அவர்கள் இந்தியாவிற்கு வந்த தேதியை நிரூபிக்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான ஆவணங்களை நிச்சயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு தேவையான ஆவணங்கள் இரண்டு பிரிவுகளில் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரிவு 1 A-வில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ், வாடகை வீட்டிற்கான ஒப்பந்தம், அடையாள அட்டைகள், ஓட்டுநர் உரிமங்கள், கல்விச் சான்றிதழ்கள் போன்றவை ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் பிரிவு 1 B-வில் இந்திய அரசு வழங்கிய விசா, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒப்புகைச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொது விநியோக அட்டை, PAN அட்டை, திருமணச் சான்றிதழ் ஆகியவை குறிப்பிடப்பட்டு உள்ளன. மேலும் இவை அனைத்தும் கண்டிப்பாக 2014-ம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்டவையாக இருக்க வேண்டும். இவற்றை வைத்து நாம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த சட்டத்திற்கு அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தான் தெரிவித்து வருகிறது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரும் என சில வாரங்களுக்கு தெரிவித்த போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதற்குக் கண்டனம் (Opposition to the Citizenship Amendment Act in TN) தெரிவித்தார் மேலும் இந்த சட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட மாட்டாது என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: CAA website: செயல்பாட்டுக்கு வந்தது CAA இணையதளம்..! |