தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு புதிய திரைப்படம் அடுத்த வாரம் 19 ஆம் தேதி ஓடிடி தளத்தில் (Jayam Ravi Movie Release in Ott) வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி (Jayam Ravi) நடிப்பில் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் சைரன் (Siren). இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யுவினா பார்த்தவி, யோகி பாபு மற்றும் அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இணைந்து இசையமைத்திருந்தார்.
இந்த சைரன் திரைப்படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். இந்த Siren Movie ஒரு கிரைம் – திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல (Siren Movie Ott Release) வரவேற்பை பெற்றது.
இந்த சைரன் படம் வெளியாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில் இந்த படம் வரும் 19 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் (Siren Movie Ott Release Date) என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக இந்த சைரன் திரைப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி (வியாளக்கிழமை) ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என செல்லப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pushpa 2 Teaser: இணையதளத்தில் குவிந்த பார்வையாளர்கள்.. |