Homeசினிமாஓடிடியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இயக்குநர் சங்கர் திரைப்படம்..! எத்தனை கோடி தெரியுமா?

ஓடிடியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இயக்குநர் சங்கர் திரைப்படம்..! எத்தனை கோடி தெரியுமா?

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்த ஓடிடி தளங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டது. கடந்த வருடத்தில் எல்லாம் பல படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பு ஓடிடியில் வெளியாகின. ஒரு சில படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின. ஆனால் தற்போது இது குறைந்துக்கொண்டே வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக பிரபல ஓடிடி நிறுவனங்கள் அனைத்தும் வெளியாகும் அனைத்துப் படங்களையும் போட்டிப் போட்டு கொண்டு வாங்கி தங்களது தளத்தில் வெளியிட்டன. ஆனால் தற்போது இது முழுவதும் குறைந்துவிட்டது. இப்போது எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும படங்கள் அல்லது பிரபலமான நடிகர்களில் படங்களை மட்டுமே அதிக விலைக்கொடுத்து வாங்குகின்றனர்.

மற்றபடி சின்னப் படங்கள், அறிமுகமில்லாத நடிகர்களில் படங்கள் போன்றவற்றை இந்த நிறுவனங்கள் வாங்குவதில்லை. அனால் முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், அவை வெளியாகும் முன்பே திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி உரிமை வாங்கிவிடுகின்றனர்.

இந்த வரிசையில் தான் தற்போது பிரபல இயக்குனரான ஷங்கர் இயக்கி நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று அதிக விலைக்கு வாங்கியுள்ளது. இந்த படத்திற்கு கேம் சேஞ்சர் (Game Changer Movie) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் இந்த வருடம் வெளியாகவுள்ளது.

இந்த கேம் சேஞ்சர் (Game Changer Movie in OTT) படத்தில் நடிகர் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டுக்குப் பின்பான ஓடிடி வெளியீட்டு (Game Changer Movie in OTT Rights Price) உரிமையை அமேசான் பிரைம் வீடியோ வாங்கியுள்ளது.

Game Changer OTT Rights Price

அதுமட்டுமின்றி இந்தி மொழி தவிர்த்து தென்னிந்திய மொழிகளுக்கான ஓடிடி உரியை ரூபாய் 150 கோடி (Game Changer OTT Rights Price) கொடுத்த இந்த நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்கு முன்னர் வரை ராஜமௌலியின் படம் தவிர்த்து எந்தப் படத்துக்கும் இவ்வளவு அதிக தொகைக்கு விற்கப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: வாரிசு நடிகருடன் இணையும் அனுஷ்கா..! படம் குறித்த அறிவிப்பு வெளியானது..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular