Homeசினிமா25 Years of Padayappa: போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..!

25 Years of Padayappa: போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..!

25 Years of Padayappa: போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்..!தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். இவரை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இவருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஸ்டைலுக்கு, நடிப்பு என்றே இன்றும் பலரும் அவரின் திரைப்படங்களை திரையரங்குகளில் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

கே.எஸ். ரவிக்குமாருடன் இணைந்து வெளிவந்த படம் தான் படையப்பா திரைப்படம். முத்து படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் தான் படையப்பா. இந்த படத்தை அந்த காலத்தில் காொண்டாடதவர்கள் யாரும் இல்லை என்றே கூற வேண்டும். இனி இதுபோல இன்னொரு படம் யாராலும் எடுக்க முடியாத அளவிற்கு ரவிக்குமார் அவ்வளவு ரசனையாக அந்த படத்தை இயக்கி இருப்பார்.

இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், அப்பாஸ், அனுமோகன், மணிவன்னண் சௌந்தர்யா, லட்சுமி, சித்தாரா, செந்தில், நாசர், ப்ரீதா விஜயகுமார் என பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ஆர். ரஹ்மான இசையமைத்திருப்பார். இந்த படத்தை ரஜினிகாந்த தன் சொந்த தயாரிப்பில் தயாரித்திருப்பார்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளிவந்தது படையப்பா. தமிழ்நாட்டில் மட்டும் 86-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளிவந்து 100 நாட்களையும் தாண்டி வசூல் சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டில் மட்டும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பீடு உரிமையை பெற்று இந்த திரைப்படம் ஓடி சாதனை (padayappa box office collection) படைத்துள்ளது.

தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நரசிம்மா என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளிவந்தது. அங்கு 46 திரையரங்குளில் வெளிவந்து 50 நாட்களையும் கடந்து ஓடி சாதனைப்படைத்தது. இந்த திரைப்படம் பிலிம்பேர் விருது, சிறந்த நடிகை விருது மற்றும் மாநில விருதுகளை பெற்றது.

கதை சுருக்கம்

வெளியூரில் படித்துவிட்டு ஊர் திரும்பும் இளைஞன் தன் சொத்துக்களையும், தன் தந்தையும் இழந்த பிறகு, விரும்பிய காதலியை கரம் பிடிக்கிறார். அவரை ஒரு தலையாக காதலிக்கும் காதல் வில்லியாக ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடித்திருப்பார். கிட்டத்தட்ட ரஜினிக்கு சமமாக அவரை எதிர்க்கும் வீர பெண்மணியாக இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடித்திருப்பார். இதுவரை ரஜினி நடித்த படங்களில் அவருக்கு வில்லனாக இன்னொரு வில்லன் என படம் ஆக்ஷன் படமாக வெளிவந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் தான் இவருக்கு எதிரி.

காதலியை திருமணம் செய்து கொண்ட ரஜினி, இதனால் அவமானத்தில் ராதாரவி தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் ரஜினியை பழிவாங்க துடிக்கிறாள் நீலம்பரி. இதில் நீலம்பரி வெற்றி பெறுவாளா என்பது தான் மீதி கதை. ஒரு பக்கம் பேமிலி ஆடியன்ஸ் மற்றொரு புறம் ஆக்ஷன் என்று படத்தை தெறிக்கவிட்ருப்பார் ரவிக்குமார்.

சுவாரஸ்யமான தகவல்கள்

இந்த படத்தில் (padayappa movie Interesting facts) ரம்யா கிருஷ்ணன் கதாப்பாத்திரத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் எடுத்ததாகவும் ரவிக்குமார் கூறியிருப்பார். இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ஆர். இசையமைக்க அவருக்கு உதவி இசையமைப்பாளராக ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். இதில் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருப்பார். இந்த படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட். இந்த படத்தில் ரஜினியின் அப்பா கதாப்பாத்திரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். அவர் கடைசியாக நடித்த திரைப்படமும் அதுதான். நடிகர் திலகம் ரஜினியுடன் 5 முறை நடித்திருப்பார்.

padayappa movie Interesting facts

இந்த படத்தின் வசனங்கள் படப்பிடிப்பில் தெரியக்கூடாது என்பதற்காக ரவிக்குமாரும், ரஜினியும் சேர்ந்தும் படப்பிடிப்பில் ரஜினி வசனம் சொல்லாமல் வெறும் ஆக்ஷன் மட்டும் தான் செய்தாராம். மற்றவர்களுக்கு அவர் என்ன டயலாக் பேசுகிறார் என்பது தெரியவில்லையாம்.

படத்தின் வசனங்கள்

இந்த படம இன்றளவும் ரசிகர்களின் மனதில் பதிந்ததற்கும் மற்றொரு காரணம் இந்த படத்தில் ரஜினி பேசிய வசனங்கள் தான். தற்போது வரை இந்த பஞ்ச் டயலாக் கேட்டால் நமக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அந்த அளவிற்கு படத்தில் சொன்ன அனைத்து பஞ்ச் டயலாக்கும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

“அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது”

”என் ஜென்ம விரோதிய கூட மன்னிச்சுடுவேன்.. ஆனால் கூடவே இருந்து குழி பறிக்குற துரோகிய மன்னிக்கவே மாட்டேன்”

”என் வழி தனி வழி.. சீண்டாத தாங்க மாட்ட”

”கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது.. கஷ்டப்படாம கிடைச்ச எதுவும் நிலைக்காது”

”போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்”

இதில் ரம்யா கிருஷ்ணன் கூறும் பஞ்ச் டயலாக் வயசானாலும் “உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகவே இல்ல” என்று சொல்வார். அதற்கு ரஜினிக்காந்த் “கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது” என்று கூறுவார். இந்த டயலாக் அன்றை காலங்களில் ரசிகர்களின் மனதில் பதிந்த ஒரு பஞ்ச் என்றே கூறலாம்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த படமாக இருந்தது இந்த படையப்பா திரைப்படம். இந்த திரைப்படம் வெளிவந்து ஏப்ரல் 10 -தேதியுடன் 25 வருடங்களை (padayappa movie completed 25 years) கடந்தது. ஆனால் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க: பையா 2: இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட பையா படத்தின் இரண்டாம் பாகம்..! சூப்பர் அப்டேட்..!
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular