Palli Vilum Palangal tamil பற்றி இந்த பதிவில் பார்க்க உள்ளோம். நம் முன்னோர்கள் பல சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களை நமக்காக உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் பல்லி ஒருவர் உடம்பில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம். பல்லி பொதுவாக ஒரு ஊர்வன வகையாகும். நம் வீட்டில் பல்லி எந்த திசையில் கத்தினால் என்ன பலன் போன்றவற்றை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.
பல்லிகளை பார்த்தால் ஒரு சிலருக்கு பயம் வரும். ஆனால் பல்லிகள் சர்வசாதாரணமாக நம் வீட்டில் உலாவரும். நம் வீட்டில் வரும் சிறுசிறு விஷ பூச்சிகளை உண்ணும். அதனால் பல்லிகள் நம் வீட்டில் இருப்பது நல்லது. நம் முன்னோர்கள் அவர்களின் காலத்தில் கெளலி சாஸ்திரம் பற்றி படித்திருக்கிறார்கள். ஒருவர் ஒரு பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் மற்றும் பல்லி ஒருவர் மீது விழுந்தால் அவருக்கு ஏற்படும் நல்ல மற்றும் கெட்ட காரியங்களை உணர்த்துவதற்கு கடவுள் படைத்த உயிரினம் தான் பல்லி என ஒரு நம்பிக்கை. தற்போது நாம் பல்லி (Palli Vilum Palangal) எங்கு விழுந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
பல்லிகள் உடம்பில் விழுந்தால் பொதுவாக ஆண் (Palli Vilum Palan For Male) மற்றும் பெண் (Palli Vilum Palan For Female) ஆகிய இருவருக்கும் பொதுவான பலன்களை பற்றி பார்க்கலாம்.
Table of Contents
தலையில் பல்லி விழுந்தால் – Thalaiyil Palli Vilum Palan
ஒருவருக்கு தலையில் பல்லி விழுந்தால் (thalaiyil palli vilunthal enna palan) அவருக்கு ஏற்பட இருக்கும் கெட்ட விஷயங்கள் நடக்க இருப்பதை பல்லி உணர்த்துவதற்கான எச்சரிக்கை ஆகும். தலையில் பல்லி விழுந்தால் கலகம் ஏற்படும். உங்களின் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களுக்கோ மரணம் ஏற்படலாம். தலை முடியில் பல்லி விழுந்தால் நன்மை ஏற்படும்.
நெற்றியில் பல்லி விழுந்தால் – (Palli Vilum Palangal tamil)
ஒருவருக்கு நெற்றியில் பல்லி விழுந்தால் (Netriyil Palli Vilunthal Enna Palan) அது அவருக்கு ஒரு நல்ல சகுணமாகும். வலது பக்க நெற்றியில் விழுந்தால் அவருக்கு கீர்த்தியும், இடது பக்க நெற்றியில் விழுந்தால் அவருக்கு லட்சுமி கடாசம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கண்,காது, மூக்குகளில் பல்லி விழுந்தால் என்ன பலன்
வலது கண்ணில் பல்லி விழுந்தால் சுகம். இடது கண்ணில் பல்லி விழுந்தால் பயம் ஏற்படும். இடது காதில் பல்லி விழுந்தால் வியாபரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வலது காதில் பல்லி விழுந்தால் ஆயுள் நீடிக்கும். வலது மூக்கில் பல்லி விழுந்தால் நோய் அதிகரிக்கும். இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை உண்டாகும்.
முகத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்
முகத்தில் பல்லி விழுந்தால் (Mugathil Palli Vilunthal) அவர்களின் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும். கன்னத்தில் பல்லி விழுந்தால் நன்மை ஏற்படும். அதாவது உறவினர்களின் வருகை இருக்கும்.
இடது கை (left hand Palli Vilum Palangal in Tamil) மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்
பல்லி ஒருவருக்கு இடது கை மற்றும் இடது கால்களில் விழுந்தால் அன்றைய தினம் முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருப்போம் என்பது ஐதீகம்.
வலது கை (Right hand palli vilum palangal in tamil) மற்றும் வலது கால்களில் பல்லி விழுந்தால் என்ன பலன்
ஒருவருக்கு பல்லி வலது கை மற்றும் வலது கால்களில் விழுந்தால் அன்றைய தினம் உடல்நல பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கழுத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்
இடது கழுத்தில் பல்லி விழுந்தால் வெற்றி உண்டாகும். அதாவது காரிய வெற்றி ஏற்படும். அதுவே வலது கழுத்தில் பல்லி விழுந்தால் எதிரிகள் உண்டாகும்.
புருவத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்
புருவத்தில் பல்லி விழுந்தால் பதவி உயர்வு கிடைக்கும் அல்லது உயர் பதவியில் இருபவர்களிடம் இருந்து உதவி கிடைக்கும்.
மார்பு, வயிறு, முதுகு மீது பல்லி விழுந்தால் என்ன பலன்
இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் தனலாபம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால் நன்மை ஏற்படும். வயிற்றின் வலது பக்கம் விழுந்தால் தானியம் சேரும். அதுவே இடது பக்கம் விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகும்.
மணிக்கட்டு மற்றும் தொடையில் பல்லி விழுந்தால் என்ன பலன்
இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் கீர்த்தி. வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பீடை ஏற்படும். பொதுவாக தொடையில் வலது, இடது தொடையில் பல்லி விழுந்தால் தந்தை அல்லது தாய் உடல் நலத்தில் கவனம் தேவை.
பல்லி விழுந்தால் செய்ய வேண்டிய பரிகாரியம்
உடலில் எந்த பகுதியில் பல்லி விழுந்தாலும் உடனடியாக தலை குளித்துவிட்டு பிறகு அருகில் இருகும் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடலாம். காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆனா பல்லி உள்ளது. அங்கு சென்று அந்த பல்லிகளை தொட்டு வணங்கினால் நமக்கு ஏற்பட்ட பல்லி தோஷம் ஏதாவது இருந்தால் நிவர்த்தியாகும்.
1. வீட்டில் பல்லி இறந்துகிடந்தால் என்ன பலன்?
வீட்டில் பள்ளி இறந்து கிடந்தால் எதிர்பாராத விரயம் உண்டாகும்.
2. பல்லி விழும் பலன் ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமா?
பொதுவாக ஆண்களுக்கு பல்லி வலது பக்கத்திலும், அதுவே பெண்களுக்கு இடது பக்கத்திலும் விழுந்தால் நல்லது. இதன்படி தான் பலன்கள் பார்க்கப்படுகிறது.
3. கோயிலில் வணங்கும் போது பல்லி சத்தமிட்டால் என்ன பலன்?
கோயிலில் வழிபடும் போது பல்லி சத்தமிட்டால் நல்ல அறிகுறியாகும். நம்முடைய பிராத்தனையை நிறைவேறியதாக உணர்வார்கள்.
மேலும் படிக்க: அமாவாசை 2024 ஆம் ஆண்டில் எப்போது? நாள், கிழமை, நேரம்..! |