சில நாட்களாகவே பாராளுமன்ற மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்புகளுக்கு மக்களும் அரசியல்வாதிகளும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர் இந்நிலையில் தான் இந்த தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் படி இன்று பாராளுமன்ற தேர்தல் (Parliamentary Election Date) குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் மொத்தம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அந்த ஐந்து ஆண்டுகள் வருகிற மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த பாராளுமன்றத் தேர்தல் (Lok Sabha Election Date) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் கமிஷனராக இருந்த அனுப் சந்திர பாண்டே கடந்த மாதம் ஓய்வு பெற்றார். மற்றொரு தேர்தல் கமிஷனரான அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக தலைமை தேர்தல் கமிஷனரான ராஜீவ் குமார் மட்டும் தேர்தல் கமிஷனர் பதவியில் இருந்தார். எனவே பிரதமர் தலைமையிலான குழு நேற்று கூடி இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்தது.
இந்நிலையில் தான் தற்போது தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் படி பாராளுமன்ற தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின் வாக்குப்பதிவு முதற்கட்ட மாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற ஏப்ரல் மாதம் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பிறகு இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 26-ம் தேதி நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட தேர்தலானது மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பிறகு மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட தேர்தல் மே மாதம் 13 தேதி நடைபெறவுள்ளது. மேலும் ஐந்தாம் கட்ட தேர்தல் மே மாதம் 20-ம் தேதியும் அதனை தொடர்ந்து ஆறாம் கட்ட தேர்தல் 25-ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இந்த ஆறு கட்ட தேர்தலுக்கு பிறகு மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வரும் மார்ச் 28-ம் தேதி நடைபெறும். மேலும் வேட்பு மனு வாபஸ் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் | ஏப்ரல் 19 |
2-ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 26 |
3-ம் கட்ட தேர்தல் | மே 7 |
4-ம் கட்ட தேர்தல் | மே 13 |
5-ம் கட்ட தேர்தல் | மே 20 |
6-ம் கட்ட தேர்தல் | மே 25 |
இதையும் படியுங்கள்: புதுப்பேட்டை 2: படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது..! |