இந்தியாவின் முக்கியமான தரிசன தலங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோவிலுக்குச் செல்லும் பயணிகள், தற்போது ஒரு விசேஷ சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பேடிஎம் நிறுவனம், ராமர் கோவிலுக்குச் செல்வதற்காக பஸ் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு, 100% கேஷ்பேக் வாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த சலுகை, பதிவுசெய்யும் ஒவ்வொரு 10வது பயணிக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
100% கேஷ்பேக் சலுகை – வெறும் புக் பண்ணதற்கே!
ராமர் கோவிலுக்குச் செல்ல பஸ் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ➤ “BUSAYODHYA” ப்ரோமோ கோடு – ₹1000 வரை கேஷ்பேக் விமான டிக்கெட் முன்பதிவிற்கு, ➤ “FLYAYODHYA” ப்ரோமோ கோடு – ₹5000 வரை கேஷ்பேக்
இச்சலுகையின் முக்கிய சிறப்பம்சமாக, பயணிகள் முன்பதிவு செய்த பஸ்ஸோ, விமான டிக்கெட்டோ எந்த நேரத்திலும் எவ்வித காரணமும் குறிப்பிடாமல், இலவசமாகவே ரத்து செய்யலாம். டிக்கெட் ரத்து செய்த உடனே, பயணத்திற்காக அவர்கள் செலுத்திய முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என்று பேடிஎம் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது, திட்டமிடல்களில் மாற்றம் ஏற்படும் பயணிகளுக்கு மிகுந்த நிம்மதியளிக்கும் ஒரு வசதியாக இருக்கிறது.
அதே நேரத்தில், பக்தர்கள் விருப்பப்பட்டால் ராமர் கோவிலுக்கான நன்கொடையையும் பேடிஎம் செயலி வாயிலாக நேரடியாக செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்மிக நம்பிக்கையுடன் பங்களிக்க விரும்பும் அனைவருக்கும் இது ஒரு எளிமையான வழியாக அமைந்துள்ளது.