Homeசெய்திகள்ஆம்புலன்சுக்கு வழி விடலைனா எவ்வளவு அபராதம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு..!

ஆம்புலன்சுக்கு வழி விடலைனா எவ்வளவு அபராதம் தெரியுமா? முக்கிய அறிவிப்பு..!

உலக அளவில் மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிரதோ இல்லையோ வாகனங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.இந்த வாகனங்கள் காரணமாக அதிக அளவிலான விபத்துகளும் நடக்கிறது. இந்த விபத்துகளின் போது நம்மை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று நம் உயிரை காப்பாற்றுவது ஆம்புலன்ஸ் வாகனங்கள் தான்.

இதன் காரணமாக தான் அவசர சிகிச்சைக்காக மக்களை அழைத்து செல்லும் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு சாலைகளில் செல்லும் மற்ற வாகனங்கள் வழி விட வேண்டும் என்பது தான் அடிப்படை விதி. ஆனால் இதனை பலர் பின்பற்றுவது இல்லை, மாறாக இடையூறு செய்கின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பெருநகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்கள் மருத்துவமனைக்கு செல்ல சில சமயங்களில் தாமதம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே இதற்காக தான் தற்போது ஒரு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க வேண்டும் என்றும் அவசர சிகிச்சையில் இருக்கும் ஒருவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த புதிய அறிவிப்பு (Ambulance Penalty) வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை ஹரியான நகரத்தின் போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பில் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற வழி விடவேண்டும் என்றும், இது போன்ற அவசர ஊர்திகளுக்கு வழிவிட மறுத்தால் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் (Penalty for not giving way to ambulance) விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Ambulance in traffic

அதுமட்டுமின்றி போக்குவரத்து சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் இந்த விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அதன் பிறகு வீடியோ ஆதாரங்களுடன் ரசீது அனுப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: பிரபல நடிகை மோசடி வழக்கில் கைது..! அட இவங்களா?
Sangeetha
Sangeetha
வணக்கம் எனது பெயர் சங்கீதா. நான் infothalam.com இல் Content creator ஆக பணியாற்றி வருகிறேன். நான் தமிழ் கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவராக இருப்பதால், அனைத்து துறைகள் சார்ந்த விடயங்களை எழுதி வருகிறேன்.
RELATED ARTICLES

Most Popular