உலக அளவில் பலரும் அறிந்த பிரபலம் நிறுவனம் தான் Paytm Payments Bank. ஆனால் சில நாட்களாகவே இந்த நிறுவனம் தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கி வருகிறது. அதேபோல தான் தற்போது இந்த நிறுவனத்தின் மீது பணமோசடி தடுப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதனால் இந்த நிறுவனத்திற்கு அபராதமும் (Paytm Payments Bank Penalty) விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் என்னவென்றால், பல மோசடி நிறுவனங்கள் சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டிய பணம் இந்த பேடிஎம் வங்கி கணக்குகள் மூலமாக தான் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இதனை பேடிஎம் நிர்வாகம் கவனிக்காமல் இருந்ததும் பெரும் குற்றமாக உள்ளது.
இதே போல தான் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் வாடிக்கையாளர் கணக்குத் தகவல்களை முழுமையாக அறிந்துகொள்வது (KYC) தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்ற தவறிய குற்றத்திற்காக ரிசர்வ் வங்கி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்திற்கு 5.39 கோடியை அபராதமாக விதித்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (02.03.2024) பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பணம் செலுத்துதல் மற்றும் பயனாளர் கணக்குகள் தொடர்பாக பண மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் கணக்குத் தகவல்களை முழுமையாக அறிந்து கொள்வது ஆகிய விதிமுறைகளை Paytm Payments Bank நிறுவனம் பின்பற்றவில்லை என்று FIU குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் அமலாக்கத் துறை கடந்த மாதம் நடத்திய விசாரணையில், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA) மீறவில்லை என்று கூறியது. இந்த புகார்களின் காரணமாக ரிசர்வ் வங்கியானது கடந்த பிப்ரவரி 29-ம் தேதி முதல் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் செயல்பாடுகளை நிறுத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவானது வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த குற்றங்களுக்காக Paytm Payments Bank நிறுவனத்திற்கு ரூபாய் 5 கோடியே 49 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: அபுதாபியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்துக் கோயில்..! பொதுமக்கள் வருகையால் கலைகட்டுகிறது..! |