தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு (TN Ration shop) முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் எந்தவித சிரமமின்றி தங்களின் பொருட்களை வாங்கிக்கொள்ள தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி பொதுமக்கள் தங்களின் பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்காவிட்டால் அரசு அதற்கான கட்டணமில்லாத அலைபேசி எண்களை கொடுத்து புகார் தெரிவித்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தது. அதன்படி பொதுமக்கள் தாங்கள் என்ன பொருட்களை வாங்கியுள்ளோம், என்னென்ன பொருட்கள் ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது என்று தமிழக அரசு கொடுத்துள்ள செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் ரேஷன் பொருட்களை குறைவில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.
இந்நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் இனி நகரப்புற ரேஷன் கடைகளில் (TN Ration Shop New Update In Tamil) இனி மண்ணெண்ணெய் கிடையாது என்று அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தள்ளார். அவர் இது குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடித்தில் கூறியுள்ளதாகவது, தமிழகத்திற்கு 2 மடங்கு மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதனால் இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு மட்டும் தான் இனி 1/2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்றும், மேலும் நகரப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இனி மண்ணெண்ணெய் (TN blue Kerosene) வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி..! தமிழக அரசு அதிரடி..! |