Homeசெய்திகள்தேர்தல் முடிவு ஒத்திவைப்பு… உயர்நீதிமன்றத்தில் மனு..!

தேர்தல் முடிவு ஒத்திவைப்பு… உயர்நீதிமன்றத்தில் மனு..!

தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High court) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

18 வது மக்களவை தேர்தல் (Parliment Election 2024) ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாக நடைபெறும் எனவும் மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 04 ஆம் தேதி வெளியாகும் (Parliment Election Results) எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த ஏழு கட்டங்களில் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகம் உள்பட பல இடங்களில் முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.

இந்த 18 வது மக்களவை தேர்தலில் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க வேண்டும். மேலும் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெயர் விடுபட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் வரை மக்களவை தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் மருத்துவராக இருக்கும் சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Petition for Postponement of Election Results) மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ஆசிரியர்களுக்கு வார்னிங்..! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular