Homeசெய்திகள்தேர்தல் எதிரொலி..! குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!

தேர்தல் எதிரொலி..! குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை..!

இந்த காலகட்டத்தில் அனைத்து வகையான பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறது. உணவுப்பொருட்கள் முதல் அனைத்து பொருட்களில் விலையும் அதிகமாக தான் உள்ளது. இந்த வரிசையில் தான் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றியமைத்துக் கொண்டு தான் உள்ளது. சில நேரங்களில் இதன் விலை அதிகரிக்கும் சில நேரங்களில் இதன் விலை திடீரென குறையும். இந்த நிலையில் தான் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் கடந்து இரண்டு வருடங்களாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் (Petrol and Diesel Price in Tamilnadu) எந்த மாற்றமும் செய்யவில்லை. ஏனெனில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்ற போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை சர்வதேச அளவில் சரிவை கண்டது எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை (Petrol and Diesel Prices) மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பின் படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த விலைகுறைப்பு இன்று காலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விலைக்குறைப்பு நடவடிக்கை மூலம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை (Petrol and diesel Price in India) குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Petrol and Diesel Price in Tamilnadu

எனவே இதுபோன்ற விலை குறைப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை (Diesel Price) குறைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் சமையல் எரிவாயு விலை ரூபாய் 100 குறைக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol and diesel Vilai in India) 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Amir Pavani Marriage Date: திருமண தேதியை அறிவித்த அமீர் மற்றும் பாவனி..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular