Vespa 140: இந்த வருடம் ஆட்டோமொபைல் துறையில் பிரபலமான பியாஜியோ குழுமம் அதன் 140 வது ஆண்டு நிறைவு ஆண்டை கொண்டாடுகிறது. இந்த ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பியாஜியோ நிறுவனம் வெஸ்பா ஜிடிவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
பிரபல வெஸ்பா ஸ்கூட்டரின் (Vespa Scooter) தாய் நிறுவனமான பியாஜியோ நிறுவனம் தொடங்கி இந்த வருடத்துடன் 140 ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஆண்டை கொண்டாடும் வகையில் அந்த பியாஜியோ நிறுவனம் அதன் லிமிடெட் எடிஷன் (Limited Edition) ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெஸ்பா ஜிடிவி ஸ்கூட்டரை அடிப்படையாக கொண்ட வெஸ்பா 140 (Vespa 140) என்றழைக்கப்படும் புதிய ஸ்கூட்டர் பியாஜியோ நிறுவனம் லிமிடெட் எடிஷன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் உலகளவில் 140 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் எனறும் அந்த நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெறியிட்டுள்ளது. அதுவும் ஒரு சில சர்வதேச டீலர்களிடம் மட்டுமே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பியாஜியோ -வின் வெஸ்பா 140 ஸ்கூட்டர் (Piaggio Scooter) ஆனது வெள்ளை நிறத்தில் ஸ்கூட்டியாகும். மேலும் அதில் உள்ள வெளிர் மற்றும் அடர் நீல நிற கோடுகள் ஸ்கூடியின் ஆர்பன் மற்றும் பக்கவாட்டு பேனல்கள் இருப்பதால் மிகவும் அழகான தோற்றம் தருகிறது.
இந்த ஸ்கூட்டர் 24bhp மற்றும் 27Nm ஆற்றலை தரக்கூடிய 278 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் மூலம் இயங்கக்கூடியது. மேலும் இது CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, கீலெஸ் ஸ்டார்ட், ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற பல அம்சங்கள் உள்ளன.
இந்த Vespa 140th of Piaggio Scooter -ல் 12 அங்குல சக்கரங்களை கொண்டுள்ளது. இதில் பிரேக்கிங் வசதியைப் பொறுத்தவரை இரு முனைகளிலும் 220 மீ ஹைட்ராலிக் டிஸ்க்குகளால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் இடது பக்க பேனலில் ஒட்டப்பட்டுள்ள 140 என்ற எண் அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற உள்ள பியாஜியோவின் வெஸ்பா வேர்ல்ட் டே 2024 (Vespa Wold Days 2024) கொண்டாட்டத்தில் இந்த வெஸ்பா 140 ஸ்கூட்டரை ஆன்லைனில் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை (Vespa Scooter Price) பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.