செய்திகள்

அயோத்தி ராமர் கோவில்..! ராமர் சிலையின் முதல் புகைப்படம் வெளியானது..!

உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கடந்த 4 வருடத்திற்கு மேலாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோவிலின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த கோவில் மொத்தம் ரூ. 1800 கோடி செலவில் 57,400 சதுரடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த ராமர் கோவிலானது இதற்கு முன் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றமானது, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டும்படி தீர்ப்பளித்தது. மேலும் இக்கோவில் மூன்று அடுக்குகளில் உருவாகி உள்ளது.

தற்போது இந்த ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. எனவே வருகின்ற ஜனவரி 22-ம் தேதி இக்கோவிலின் திறப்பு விழா (Ayothi Ramar Temple Opening Date) நடைபெறவுள்ளது.

இந்த திறப்பு விழாவில் நம் இந்திய நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் கலந்தக்கொள்ள உள்ளார். மேலும் பல பிரபலங்களும் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும் இக்கோவில் பாலகன் வடிவில் உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் தற்போது இக்கோவிலில் நிறுவப்படவுள்ள ராமர் சிலையில் (Ayothi Ramar Statue) புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த சிலை கோவிலின் கருவறை உள்ளே கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் கண்கள் மூடப்பட்ட நிலையில் அழகிய ராமர் சிலை உள்ளது. மேலும் கையில் வில் அம்பு எதுவும் இன்றி சாந்தமான தோற்றத்துடன் உள்ளது. இந்த சிலையானது வரும் ஜனவரி 22-ம் தேதி முறைப்படி பிரதிஷ்டை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு வீட்டிற்கு சென்று அழைப்பு..! யாருக்கு தொரியுமா?
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago