Pink Booth: நாட்டின் 18-வது மக்களவை தேர்தல் நாளை முதல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் நாளை வாக்கு செலுத்த வேண்டி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எந்த ஒரு காரணங்களாலும் மக்கள் வாக்கு செலுத்தாமல் போய்விடக்கூடாது என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தலாம். தமிழகம் முழுவதும் சுமார் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் சென்னை நகரத்தில் மட்டும் சுமார் 3,726 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சுமார் 944 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடியில் 16 வாக்குச்சாவடிகள் பிங்க் நிறத்தில் (pink colour election booth tamilnadu) அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. தொகுதிக்கு தலா 1 என்ற முறையில் இந்த 16 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் முழுக்க முழுக்க பெண்களாக மட்டும் தான் இருப்பார்கள்.
இந்த பிங்க நிற வாக்குசாவடி (Pink Election Booth) பெண்களுக்காக மட்டும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வெயில் காலத்தில் கைக்குழந்தையுடன் வாக்களிக்க வரும் பெண்கள், மூதாட்டிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியவர்களுக்கு இங்கு பிரத்யேக வரிசைகள் தயார் செய்யப்பட்டிருக்கும். இந்த வாக்குச்சாவடிகளில் உதவி மையம், முதியவர் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம் ஆகியவையும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடி (Pink Booth) பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கு அனைவருமே வாக்களிக்கலாம். மூதாட்டிகள் மற்றும் கர்ப்பிணிகள் நலன் கருதி இவ்வாறு அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பலரது பாராட்டை பெற்றுள்ளது என கூறலாம்.