செய்திகள்

மத்திய அரசு வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்தும் தேதி அறிவிப்பு..!

மத்தியில் உள்ள அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பிரமர் மோடி விவசாயிகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். அந்த திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்னும் திட்டம்.

இந்த திட்டம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க தொடங்கப்பட்ட திட்டமாகும் (pm kisan thittam in tamil). இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1 தேதி தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் இந்திய அரசின் நிதியுதவியால் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் தங்களின் விவசாயத்திற்கான நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கிறது.

இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கியதிலிருந்து ஆண்டிற்கு 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.2000 செலத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 6000 வரை ஒரு விவசாயின் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 தவணைகள் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது 16-வது தவணைக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 28-ம் தேதி புதன்கிழமை பிரதமர் மோடி மகராஷ்ட்ரா மாநிலம் யவாத்மால் மாவட்டத்தில் 16-வது தவணைக்கான தொகையை (pm kisan 16th thavanai thogai) வெளியிடுவார் என்று PM-KISAN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 16-வது தவணை தொகை (pm Kisan 16th installment date) உயர்த்தி வழங்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. அதாவது ஆண்டிற்கு ரூ.6000-லிருந்து ரூ. 8000 – ஆக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தவணை தொகையை பெற வேண்டுமானால் பி.எம்.கிசான் அதிகாரப்பூர்வ இணைதளத்தில் ஆதார் எண் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு உறுதி செய்த பயனாளர்களுக்கு மட்டும் தான் பணம் செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கிசான் கிரெடிட் கார்டு..! விண்ணப்பிப்பது எப்படி? How to Apply for Kisan Credit Card..?

இந்த திட்டத்தில் பலனடைவோர்அருகில் உள்ள பொது இ-சேவை மையம் சென்று pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து சரிபார்த்து கொள்ளுங்கள். இது குறித்து சந்தேகங்கள் எழுந்தால் PM-Kisan திட்டத்தின் உதவி எண்கள் 1555261 மற்றும் 1800115526 அல்லது 011-23381092 எண்களை அழையுங்கள். இதுமட்டுமன்றி பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரியான pmkisan-ict@gov.in மூலமும் தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கான பதிலை பெறலாம்.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை: மத்திய அரசின் புதிய அப்டேட்..! மகிழ்ச்சியில் மக்கள்
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago