இந்திய பிரதமர் மோடி அவர்கள் தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் (BJP General Meeting in Salem) இந்திய பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த உரையின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேடையில் கண்கலங்கிய படி பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் பல விதமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது இந்திய பிரதமரும் பாஜகவின் தலைவருமான நரேந்திர மோடி தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்க்கெண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெற்று வருகின்ற பாஜக பொதுக்கூட்டத்தில் (BJP General Meeting in Salem) மோடி உரையாற்றினார். இந்த உரையின் போது அவர் திடீரென கண்கலங்கியுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பல திட்டங்களை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசிய அவர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை தன்னால் எப்போது மறக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேசுகையில் அவர் கண்களில் கண்ணீர் வந்தது இது அங்கிருந்து அனைவரையும் ஒரு நிமிடம் துயரத்தில் ஆழ்த்தியது. மேலும் தொடரந்து பேசிய அவர் இந்து தர்மத்திற்கு எதிராக INDIA கூட்டணி உள்ளதாக அவர் கூறினார். ஆன்மீகம் சனாதனத்தை அழித்துவிடுவோம் என்று பேசுவது அனுமதிக்க முடியுமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்: 32 அரசு பள்ளிகள் திடீரென மூடல்..! தமிழக அரசு அதிரடி..! |