உலகம் முழுவதும் மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதத்தில் பிரதமர் மோடி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு பயன்பாட்டு கேஸ் சிலிண்டர்களின் விலையை குறைப்பதாக (Cylinder Vilai Kuraippu) அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் படி வீட்டு பயன்பாடு எரிவாயு சிலிண்டர்களின் விலையானது ரூ.100 குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமை கணிசமாகக் குறையும் என்று நம்புகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு (Cylinder price reduction) குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில் ஒரு பதிவி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் இன்று மகளிர் தினம் என்பதால் பெண்களுக்கு சமையல் செய்ய உதவியாக இருக்கும் எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பட்டு இருந்தார். மேலும் இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும் என்று அவர் அப்பதிவில் கூறியிருந்தார்.
மேலும் இந்த சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.மேலும் இது பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு எளிதாக வாழ்வதை உறுதி செய்வது என்ற எங்கள் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: சரித்திர சாதனையை படைத்தார் ரோகித் சர்மா..! |