தமிழகத்தில் தொடர்ந்து நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் செயல்படுத்தப்படுவதுமாக தான் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக முதல் பல திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்தார். மேலும் நேற்று கூட நம் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த வரிசையில் தான் தற்போது ராக்கெட் ஏவுதளம் (Kulasekarapattinam Rocket Launch Pad) ஒன்று அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் என்னும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதை தொடர்ந்து இன்று குலசேகரப்பட்டினத்தில் தற்காலிகமாக கான்கிரீட் தளம் மூலம் சிறிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில், ஆர்.எச்.200 சவுண்டிங் என்னும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் செயற்கைக்கோள்களுக்கு பதிலாக காற்றின் திசை வேகத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராக்கெட் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில், விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் காற்றின் திசை வேகம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள உதவும் என்று கூறப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இந்த ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்களை சரியான முறையில் இயக்க இந்த தகவல்கள் மிகவும் பயணுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
குலசேகரன்பட்டினத்தில் உருவாக உள்ள ராக்கெட் ஏவுதளம் (Kulasekarapattinam Rocket Launching Ground) அமைக்கும் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகு செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு முழுமையாக ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர் 1960-களில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு முன்பே கீழக்கரை வாலிநோக்கம் பகுதியில் இதற்கான முயற்ச்சிகள் எடுக்கப்பட்டது. எனினும் சில காரணங்களால் இது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தான் 60- பிறகு இப்போது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது தமிழகத்தின் 60 ஆண்டு கனவுத நிறைவேறியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
இதையும் படியுங்கள்: Gaganyaan: விண்வெளியில் பறக்க உள்ள வீரர்களை பிரதமர் அறிமுப்படுத்தினார்..! |