லைஃப்ஸ்டைல்

Pocso Act in Tamil: போக்சோ சட்டம் என்ன சொல்கிறது..! முழு விவரம் இதோ..!

போக்சோ சட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சிறந்த சட்டம் ஆகும். இச்சட்டமானது கடந்த 2012-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின் முக்கிய நோக்கம் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து காப்பது தான். இதுகுறித்த தகவல்கள் பலருக்கு தெரிந்தாலும் சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லாமலே உள்ளது. எனவே இப்பதிவில் நாம் போக்சோ சட்டம் (Pocso Act in Tamil) பற்றிய தகவலை பார்க்கலாம்.

போக்சோ வழக்கு என்றால் என்ன (What is Pocso Act)

போக்சோ வழக்கு என்பது 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் மற்றும் அந்த குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு கட்டாயப்படுத்துவது பெரும் குற்றமாகும் இந்த வகையான வழக்குகள் போக்சோ வழக்குகள் என்று ஆழைக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் மூலம் தண்டனைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனையா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அதிகபட்சமான தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது. இவைகள் மட்டுமின்றி அவர்களுக்கு அபராதமும் அதிகபட்சமாக விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் விரிவாக்கம்

போக்சோ சட்டம் என்பது பாலியல் சம்பம்பத்தப்பட்ட குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் அகும். இதன் விரிவாக்கம் POCSO- The Protection of Children from Sexual Offenses Act, 2012 என்பதாகும். இச்சட்டம் இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.

போக்சோ சட்டம் தண்டனைகள் (Pocso Act Punishment)

போக்சோ சட்டத்தின் கைதாகும் குற்றவாளிகளுக்கு தண்டனை அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே எனவே போக்சோ சட்டத்தில் உள்ள பிரிவுகள் பற்றி இனி பார்க்கலாம்.

போக்சோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4 (Section 3 And 4 of Pocso Act)

குழந்தைளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் குற்றவாளிகளுக்கு போக்சோ சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4-ன் படி குறைந்தபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்ட தண்டனையாக ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 (Section 5 And 6 of Pocso Act)

இந்த போக்சோ பிரிவு 5 மற்றும் 6-ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரிகளாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் தண்டனையாக 10 ஆண்டுகள் சிறை மற்றும் அதிகபட்சமாக தண்டனையாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். மேலும் அதிபட்சமாக அபராதமும் உண்டு.

போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 (Section 7 And 8 of Pocso Act)

  • குழந்தைகளை தகாத முறையில் நடத்துவது மற்றும் அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது அல்லது அதுபோன்ற செயல்களை அவர்களை செய்ய வற்புறுத்துவது போன்ற பாலியல் தீண்டல்களுக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
  • இது போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் வரை சிறை தண்டணை வழங்கப்படும். மேலும் அதிகபட்ச தண்டனையாக 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இவை மட்டுமின்றி அபராதமும் உண்டு

போக்சோ சட்டம் பிரிவு 9 மற்றும் 10 (Section 9 And 10 of Pocso Act)

போக்சோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10-ன் கீழ் குழந்தைகளை தகாத முறையில் நடத்துவது மற்றும் அவர்களின் அந்தரங்க உறுப்பைகளை தொடுவது அல்லது அதுபோன்ற செயல்களை அவர்களை செய்ய வற்புறுத்துவது போன்ற பாலியல் தீண்டல்கள்களில் ஈடுபடுபவர்கள் குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறையும் அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் இதற்கு அதிகபட்ச அபராதமும் உண்டு.

போக்சோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12 (Section 11 And 12 of Pocso Act)

போக்சோ சட்டம் பிரிவு 11 மற்றும் 12- கீழ் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது மற்றம் தொலைபேசி போன்றவற்றில் ஆபாசமாக பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது மற்றும் ஆபாச படங்களை காட்டுவது போன்ற குற்றங்கள் இதன் கீழ் அடங்கும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

போக்சோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14 (Section 13 And 14 of Pocso Act)

  • இந்த சட்டப்பிரிவின் கீழ் குழந்தைகளை ஆபாசமாக படம் பிடிப்பது மேலும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை விற்பது, தயாரிப்பது ஆகியவை இப்பிரிவில் அடங்கும். இந்த குற்றம் இணைய தளம் போன்ற எந்த ஒரு தொழில்நுட்பம் ரீதியாக நடைபெற்றாலும் அது குற்றமே.
  • இது போன்ற குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படுகிறது. மேலும் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும்.

போக்சோ சட்டம் பிரிவு 18 (Section 18 of Pocso Act)

  • போக்சோ சட்டம் பிரிவு 18-ன் படி குழந்தைகளை பாலியல் குற்றங்களுக்கு ஈடுபடுத்த முயன்றால் 1 வருட சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
  • குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பது மற்றும் அவற்றை மறைப்பது போன்ற குற்றங்கள் இந்த பிரிவின் கீழ் அடங்கும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மற்ற பிரிவுகளில் வழங்கப்படும் தண்டனை வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான நடக்கும் பாலியல் குற்றத்தை மறைத்தாலும் பிரிவு 21 படி குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.

இப்பதிவில் போக்சோ சட்டம் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

இதையும் படியுங்கள்: Leap Year in Tamil: உலகமே எதிர்பார்க்கும் ஒரு நாள்… லீப் ஆண்டின் ரகசியம்..!

போக்சோ சட்டம் – FAQ

1.போக்சோ வழக்கு என்றால் என்ன?

18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அனைத்தும் போக்சோ வழக்குகள் என்று ஆழைக்கப்படுகிறது.

2. போக்சோ (POCSO) சட்டம் விரிவாக்கம்?

போக்சோ என்பதன் விரிவாக்கம் POCSO -The Protection of Children from Sexual Offenses Act, 2012 என்பதாகும்.

3. போக்சோ சட்டம் என்றால் என்ன?

போக்சோ சட்டம் என்பது பெண் குழந்தைகளுக்கு எதிரான நடைபெறும் பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதற்க்காக உருவாக்கப்பட்ட சிறந்த சட்டம் ஆகும்.

Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago