Homeசெய்திகள்தாய்மார்களே போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும் தேதி அறிவிப்பு..!

தாய்மார்களே போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும் தேதி அறிவிப்பு..!

நம்மில் பலரும் வாழ்வில் ஒருமுறையாவது இந்த போலியோ சொட்டு மருந்துகளை சுவைத்து இருப்போம். இந்த சொட்டு மருந்து முகாம் வருடா வருடம் நடைபெற்றுக்கொண்டு தான் வருகிறது. இந்த முகாமில் 5-வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்படும். இப்போது அதற்கான தேதி (Polio Drops Camp Date in This Year) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 3-தேதி அதாவது வரும் ஞாயிற்று கிழமை இந்த சொட்டு மருந்து முகாம் (Polio Sottu Marunthu Mugam Date) தமிழகத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் மொத்தம் 43,051 மையங்களில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் போன்றவை அடங்கும்.

இந்த மையங்களில் மூலம் சுமார் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து (Polio Drops Camp) வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறபட்டுள்ளது. மேலும் இந்த சொட்டு மருந்து வழங்கும் முகாம்களளுக்கு யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனம், பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் மிகவும உறுதுணையாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

போலியோ சொட்டு மருந்து முகாமின் சிறப்பம்சங்கள்

  • சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
  • 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மார்ச் 3 (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
  • தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவது (Sanitizer) உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.
  • தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
  • அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.
  • விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.
  • முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
  • போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும்.
  • போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் (Transit Booths) சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
  • போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழகம் தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும்.
Polio Sottu Marunthu Mugam Date in this Year

எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

இதையும் படியுங்கள்: பணிப்பெண் சித்திரவதை..! MLA மகன் ஜமீன் வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular