லைஃப்ஸ்டைல்

பொங்கல் வரலாறு..! Pongal History in Tamil..!

பொங்கல் பண்டிகை (Pongal History in Tamil) கி.மு. 200 மற்றும் கி.மு. 300 களில் இருந்தே தமிழர்கள் அறுவடை நாளாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இயற்கையை வணங்கும் ஒரு விழாவாக தமிழர்கள் இந்த பண்டிகையை கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை (Pongal festival in tamil) சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகையாகவும், அடிப்படையில் இந்த பொங்கல் பண்டிகை ஒரு அறுவடை Aruvadai thirunal in tamil திருநாளாகும். தமிழர்கள் கொண்டாடும் இந்த பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு உதவியாக இருந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், உழவுக்கு உறுதுணையாக இருந்த காளை மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். ஜாதி, மதம் கடந்து அனைவரும் ஒற்றுமையாக இந்த பண்டிகையை கொண்டாடுவார்கள். முக்கியமாக அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அனைவரும் இணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடுவார்கள். நமது வலைதளத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் வரலாற்றை Pongal History in Tamil பற்றி காண்போம்.

நான்கு நாள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

  • ஜனவரி 14-ம் தேதி போகிப் பண்டிகை,
  • ஜனவரி 15-ம் தேதி தைப்பொங்கல்,
  • ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல்,
  • ஜனவரி 17-ம் தேதி காணும் பொங்கல்

போகி பண்டிகை – Bhogi pongal in Tamil

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது பழமாெழி. இந்த பழமொழிக்கு ஏற்றவாறு இந்த பண்டிகை (Bhogi Pandigai in tamil) கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் மார்கழி கடைசி நாள் அதாவது தைப்பொங்கலுக்கு முதல் நாள் கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் அவர்களின் வீடுகளை சுத்தம் செய்து வீடுகளுக்கு வெள்ளை அடிப்பார்கள். பழைய பொருட்களை நெருப்பில் போட்டு எரித்துவிடுவார்கள். இந்த போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எப்படி தீயில் இட்டு எரித்துவிடுவார்களோ, அதுபோல கெட்ட எண்ணங்களையும் அந்த தீயில் போட்டு எரித்துவிட வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

ஆடி மாதத்தில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து வைத்திருப்பார்கள். ஆடி மாதத்தில் விதைத்த பயிர், ஆடி மாதத்தில் இருந்து 6 மாத காலங்கள் குளிர், மழை என அனைத்தும் கடந்து மார்கழியில் அறுவடை செய்து வைத்திருப்பார்கள். தைப்பொங்கல் அன்று புத்தரிசி இட்டு பொங்கல் வைப்பார்கள். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ப மார்கழி வரை அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து தை மாதத்தில் இருந்து புது வாழ்வு வருவதாக ஒரு நம்பிக்கை.

மேலும் படிக்க: Bhogi Pongal wishes in tamil: போகி பண்டிகை வாழ்த்துக்கள்..!

தைப்பொங்கல் வரலாறு – Thai Pongal History in Tamil

தைப்பொங்கல் தை மாதம் முதல் நாள். அனைத்து தமிழர்களின் வீடுகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் அன்று அதிகாலையில் பெண்கள் வண்ண கோலங்களுடன் பொங்கலை வரவேற்க ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு நல்ல நேரம் பார்த்து வீட்டின் முன்பு (வாசல்) அடுப்பு அமைத்து மண்பானையில் மஞ்சள் கட்டி புதுப்பானையில், புது அரிசி இட்டு வெல்லம், நெய், பால் ஆகியவற்றை சேர்த்து பொங்கல் வைப்பார்கள். பொங்கல் வைத்த பின்பு செங்கரும்பு, பொங்கல் ஆகியவற்றை சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுவார்கள். இந்த சூரிய பொங்கலில் ஆடி மாதத்தில் விளைவித்த கிழங்கு, மஞ்சள், வாழை ஆகியவற்றை வைத்து வழிபடுவார்கள்.

மேலும் படிக்க: பொங்கல் வாழ்த்துக்கள்: தமிழர் திருநாள் Pongal Wishes 2024 in Tamil

மாட்டுப் பொங்கல் – Mattu Pongal

மாட்டுப் பொங்கல் தை மாதம் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் அன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்க வைத்து அலங்காரம் செய்வார்கள். மாட்டு தொழுவத்தையும் சுத்தம் செய்து கோலம் போடுவார்கள். மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, பொட்டு வைத்து தோரணம் கட்டி பார்பதற்கே அழகாக தெரியும்.

உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த மாட்டுப் பொங்கல் அன்று பொங்கல் வைத்து அதனை மாடுகளுக்கு கொடுப்பார்கள். இன்றும் கிராமங்களில் மாடுகளை மாட்டுப் பொங்கல் அன்று வண்டிகளில் பூட்டி ஊர்வலமாக செல்வார்கள்.

மேலும் படிக்க: Mattu Pongal Wishes in Tamil..! இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

காணும் பொங்கல் – Kaanum Pongal

இந்த காணும் பொங்கல் தை மாதம் 3-ம் தேதி கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் (Kanni Pongal In Tamil) என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகையின் போது உறவினர்களை சந்திப்பது வழக்கம். நம் முன்னோர்கள் இந்த காணும் பொங்கலை, அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதற்காகவே கொண்டுவரப்பட்ட பண்டிகையாகும். இந்த காணும் பொங்கல் அன்று மக்கள் அவர்களின் உறவினர்கள் வீடு, நண்பர்களை சந்திப்பது, பொழுதுப்போக்கு இடங்களுக்கு சென்று குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள்.

கிராமங்களில் காணும் பொங்கல் அன்று பல வித போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், இன்னும் குறிப்பாக பெரியவர்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக காணும் பொங்கல் போட்டிகளில் பங்கேற்பார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.

சமத்துவ பொங்கல் – Samathuva Pongal

இந்த பொங்கல் பண்டிகை உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழர்களும் அவர்களை சார்ந்து உள்ளவர்களோடு சிறப்பாக கொண்டாடுவார்கள். சிங்கப்பூர், கனடா போன்ற நாடுகளிலும் கூட உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இலங்கை, மலேசியா, கனடா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை தமிழ் இந்துகளால் மட்டும் தான் கொண்டாடப்படுகிறது என பலர் கருதுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் அவர்களின் வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடுகிறார்கள். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்கள் அங்கு வேலை பார்க்கும் மற்ற நபர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

தமிழகத்தில் உள்ள பல பள்ளி, கல்லூரிகளில் அனைத்து மாணவர்களும் சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.

கரும்பு வைத்து பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம் – Pongal karumbu

பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது கரும்பு. அதாவது செங்கரும்பு தான். பொங்கல் பண்டிகை பொதுவாக விவசாயத்தை சார்ந்து தான் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை அன்று கரும்பு வைத்து கொண்டாடப்படுவதற்கும் ஒரு சிறப்பு உண்டு. பொங்கல் தினத்தன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சிவபெருமான், அந்த கோயிலில் “சுந்தரேஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். அவர் அந்த கோயிலில் உள்ள யாணையின் கல் உருவத்திற்கு கரும்பு ஊட்டும் அற்புதத்தை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து பொங்கல் பண்டிகை அன்று கரும்பு வைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கரும்பு உணர்த்தும் தத்துவம்

கரும்பு பொதுவாக இனிப்பாக இருக்கும். இதனை சுவைப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். நம் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையும் இனிப்பாக, முக்கியமாக மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக கரும்பு வைத்து கொண்டாடப்படுகிறது. கரும்பின் நுனி பகுதி கொஞ்சம் இனிப்பு குறைவாக இருக்கும். ஆனால் அடி பகுதி இனிப்பாக இருக்கும். கரும்பின் அடி பகுதி கடிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் சுவைக்க மிகவும் இனிப்பாகவும் சாப்பிடுவதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும். அது போல தான் வாழ்க்கையும். கடினமாக உழைத்தால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை இது உணர்த்துகிறது.

பொங்கல் வைக்கும் முறைகள்

பொங்கல் வைக்கும் போது (Pongal Vaikum Murai in Tamil) கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் உள்ளன. பொங்கலை நாம் வீட்டின் முன்புறம் தான் வைக்க வேண்டும். அதாவது வாசலில் வைக்கலாம். வாசலில் செங்கல் வைத்து அல்லது கிராமங்களில் அடுப்பு அமைத்து பொங்கல் வைப்பார்கள். பொங்கலை மண்பானையில் வைப்பது சிறப்பு. அந்த பானையில் மஞ்சள் கொத்து கட்டி நல்ல நேரம் பார்த்து அடுப்பை ஏற்ற வேண்டும். ஒரு பொங்கல் பானையை மட்டும் வைத்து பொங்கல் செய்ய கூடாது. இரண்டு பானைகளிலும் ஒன்றாக தான் பொங்கல் வைக்க வேண்டும்.

சிலர் வீட்டின் வெளியில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் வீட்டின் உள்ளே கேஸ் அடுப்பில் வைப்பார்கள். அப்படி வைத்தவர்கள் பொங்கல் வைத்த பின்பு வெளியில் சூரியனுக்கு படைத்து விட்டு பிறகு வீட்டிற்குள் எடுத்து வந்து அனைவரும் உண்ணலாம்.

பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது

நம் முன்னோர்கள் பொங்கலை எப்படி வைக்க வேண்டும் அப்படி வைக்கும் பொங்கல் எந்த திசையில் பொங்கினால் நல்லது pongal entha thisaiyil ponginal nallathu அந்த வருடம் எப்படி இருக்கும் என அனைத்தையும் வகுத்து வைத்துள்ளனர்.

  • கிழக்கு திசையில் பொங்கினால் வாகனங்கள், தங்க ஆபரணங்கள், வீடு, மனை வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால் அது நிறைவேறும்.
  • மேற்கு திசையில் பொங்கினால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். வீட்டில் மகன், மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லபடியாக முடியும். சுபநிகழ்வு நடைபெறும்.
  • வடக்கு திசையில் பொங்கல் பொங்கினால் பதவி உயர்வு, வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணம் நிறைவேறும்.
  • தெற்கு திசையில் பொங்கல் பொங்கினால் அந்த வருடம் சற்று உடல்நலத்தில் கவனம் தேவை என்றே சொல்லலாம். சுபகாரியங்கள் தள்ளி போக வாய்ப்புள்ளது.

பொங்கல் – fAQS

1. 2024 – ஆம் ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன? Pongal Vaikka Nalla Neram 2024?

காலை 6.30 முதல் 7.30 அல்லது 9.30 முதல் 10.30 மணி வரையில் பொங்கலிடலாம். காலை 11.00 முதல் மதியம் 01.00 மணி வரையான நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

2. 2024 மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம்? Mattu Pongal Vaikka Nalla Neram 2024?

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வைக்கலாம். மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 க்குள் வைக்கலாம்.

3. சமத்துவ பொங்கல் என்றால் என்ன? Samathuva Pongal Endral Enna?

பொங்கல் திருநாளன்று அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் ஜாதி, மதம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைப்பதே சமத்துவ பொங்கல்

Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago