லைஃப்ஸ்டைல்

Pongal Wishes in Tamil: பொங்கல் வாழ்த்துக்கள் 2024

நமது வலைதளத்தில் Pongal Wishes in Tamil பற்றிய வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளோம். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையை உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஜாதி, மதம் கடந்து அனைவரும் இயற்கையை போற்றி கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே தமிழர்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும். ஆம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான தை முதல் நாளை நாம் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கு உதவியாக இருந்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனுக்கும், உழவுக்கு உறுதுணையாக இருந்த காளை மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

இந்த பொங்கல் பண்டிகை 4 நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் தேடி விளைவித்த பயிர்களை தை மாதத்தில் அறுவடை செய்து அந்த புத்தரிசியை புதுபானையில் வைத்து வெல்லம், முந்திரி, திராட்சை பாேன்றவற்றை இட்டு பொங்கல் வைப்பார்கள். அந்த பொங்கல் பொங்கி வரும் போது அனைவரும் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி வரும். அப்போது பெரியோர்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் பொங்கலோ.. பொங்கல் என்று கூச்சலிடுவார்கள் (Happy Pongal wishes in Tamil).

இந்த பொங்கல் பண்டிகைக்கு உலகெங்கிலும் உள்ள உங்கள் உறவுகளுக்கு உங்கள் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள நமது வலைதளத்தின் சார்பாக பொங்கல் வாழ்த்துக்கள் படங்களை (Pongal Wishes 2024 HD Images In Tamil) பதிவிட்டுள்ளோம். அதனை அவர்களுடன் பகிர்ந்து இந்த வருட பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள். நமது வலைதளத்தின் சார்பாக அனைவருக்கும், அனைத்து தமிழர்களுக்கும் (Iniya Pongal Nalvalthukkal) இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் – Iniya Pongal Nalvalthukkal 2024

புதுமை பொங்க, இனிமை தங்க…
செல்வம் பொங்க, வளமை தங்க..
அனைவருக்கும் இனிய தை திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் – Iniya Pongal Nalvalthukkal 2024 in Tamil

மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
புதுச்சோறு பொங்கி வரும்
பொங்கல் வாழ்த்துகள்

Pongal Valthukkal 2024பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பச்சரிசி அச்சு வெல்லம்
கலவை செய்து பொங்கலிட்டு
பகலவனை வணங்கிவிட்டு
பகைவரையும் வாழ்த்துவோமே..
இனிய தை திருநாள்
நல்வாழ்த்துக்கள்.

Thai Pongal Valthukkal 2024 Pongal thirunaal wishes in tamil

இந்த தை திருநாளில்
இல்லா வளங்களும்,
எல்லா வளங்களும்
பெற்று இனிதே வாழ,
இனிய
தை திருநாள் நல் வாழ்த்துக்கள்!

Pongal Valthukkal 2024 in Tamil

அறுவடைத் திருநாள், இனிய பொங்கல் நன்னாளில்
தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் பெருகி,
நலமும், வளமும் பெருகட்டும்.

Thai pongal valthukkal in tamil 2024

அன்பு பொங்க, ஆசைகள் பொங்க,
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

Pongal wishes in Tamil 2024

இந்த பொங்கல் உங்கள் வாழ்வில்
நன்மை, அமைதி,
ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Pongal wishes 2024 in Tamil

எல்லாம் வல்ல இறைவன்
உங்கள் அனைவருக்கும்
சிறந்த ஆரோக்கியம்,
செல்வம் மற்றும் செழிப்புடன் அருள்புரிவானாக
பொங்கலோ பொங்கல்.

Pongal Quotes in Tamil – Pongal Quotes 2024 in Tamil

தமிழக மக்கள் அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த
பொங்கள் நல் வாழ்த்துக்கள்..

Thai Pongal 2024 quotes in Tamil – பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் and Pongal Valthukkal status

இந்த புனிதமான பொங்கல் நாளில்
உங்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சி பொங்க
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இந்த பொங்கல் திருநாளில் அனைவரும் ஒன்றாக அவர்களின் குடும்பங்கள், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இந்த பொங்கல் (New Pongal Wishes in Tamil) பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள். இந்த பொங்கல் பண்டிகையை தமிழ் கவிதைகளோடு (pongal kavithai in tamil) கொண்டாடுங்கள்

மேலும் படிக்க: இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!

பொங்கல் – FAQS

1. ஏன் பொங்கல் கொண்டாடுகிறோம்?Why do we celebrate Pongal?

இது அடிப்படையில் ஒரு அறுவடைத் திருவிழா அல்லது ‘நன்றி செலுத்தும்’ விழாவாகும். விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த சூரிய பகவானுக்கும், உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாவாகும்.

2. பொங்கலுக்கு அறிவியல் காரணம் என்ன? What is the scientific reason behind Pongal?

இந்த நாளின் அறிவியல் முக்கியத்துவம் என்னவென்றால், சூரியன் மகரத்தில் நுழைகிறது; இது மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது, ஆனால் தமிழர்கள் இதை “தை திருநாள்” என்று அழைக்கிறார்கள்.

3. எந்த மாநிலம் பொங்கலை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்? Which state invented Pongal?

தமிழகத்தில் தான் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

4. பொங்கல் பண்டிகை அன்று ஏன் கரும்பு வைக்கிறார்கள்? Why do we keep sugarcane for Pongal?

தென்னிந்தியாவில் சிவபெருமான் பொங்கல் தினத்தன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள யானையின் செதுக்கப்பட்ட கல் சிற்பத்திற்கு கரும்பு ஊட்டினார் என்றும், அன்றிலிருந்து அவரை போற்றும் வகையில் கரும்பு பொங்கல் வைத்ததாகவும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: பொங்கல் வரலாறு..! Pongal History in Tamil..!
Sangeetha

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago