சினிமா

சிம்புவுடன் பூஜா ஹெக்டே..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தனது சிறுவயதில் இருந்தும் நடித்து வரும் நடிகர் என்றால் அவர் சிம்பு தான். இவர் தற்போது வரை தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்டு தான் உள்ளார். எனினும் இடையில் சில நாட்களாக பல இறக்கங்களை சந்தித்தார். ஆனால் அவற்றை கண்டு எல்லாம் துவளாமல் தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். தற்போது தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தும் வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது இவர் தனது அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இப்படமானது சிம்புவின் 48-வது படம் ஆகும். தன்னுடைய கரியரில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் இவர் ஃபுல் பார்மில் தான் உள்ளார்.

இவர் சமீபத்தில் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களும் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் தற்போது அவர் நடிக்கவுள்ள இப்படமும் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எஸ்டிஆர் 48 திரைப்படத்தினை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது. இப்படத்தினை இதற்கு சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற திரைப்படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ரஜினியிடம்தான் முதலில் கூறினாராம். ஆனால் சில காரணங்களால் அவர் விலக தற்போது சிம்பு நடிக்க உள்ளார். இவர் நடிப்பில் இதற்கு முன்னர் வெளியான பத்து தல படத்தையும் ரஜினியை வைத்து உருவாக்க இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்துக்காக சிம்பு கடினமாக உழைத்து வருகிறார். இதற்காக இவர் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட பல கலைகளை தீவிரமாக பயின்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கி நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

STR 48 படத்தில் கதாநாயகியாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இதற்கு முன்னர் தமிழில் முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தகவல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது இவர்கள் இருவருக்கு ஜோடி பொருத்தம் சூப்பராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: அடுத்தடுத்த அப்டேட்டுகள்… வைரலாகும் தல புகைப்படங்கள்..!
Jayasri C

Recent Posts

வெறும் 5 நிமிட நடிப்பிற்கு 5 கோடி சம்பளம் வாங்கும் பிரபல நடிகை… யார் ஆவர்?

தென்னிந்திய சினிமாவில் பல முக்கிய முன்னணி நடிகைகள் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள நடிகை தான் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில்…

2 months ago

அதிகம் படித்த பெண்ணை திருமணம் செய்யாதீர்கள்..! வைரலாகும் போஸ்ட்..!

தற்போது திருமணத்திற்கு பலரும் பெண் கிடைக்காத நிலையில், சமூக வலைத்தளத்தில் வந்த ஒரு பதிவு அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சமூக வலைத்தளத்தை திறந்தாலே…

2 months ago

தெலுங்கு சினிமாவை பழிவாங்க தான் வின்னர் திரைப்படம் எடுத்தேன்..!

தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு இயக்குநர் என்றால் அது சுந்தர்.சி தான். இவரின் படங்கள் மட்டும் ரசிகர்களை தன்வசம் படுததும் அளவிற்க தனியாக தெரியும். இந்நிலையில்…

2 months ago

Election Movie Release Dates: உறியடி விஜய் குமாரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

உறியடி என்ற படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் விஜய்குமார். இவர் புதிதாக நடித்துவரும் படம் தான் எலக்சன். இந்த படம் வெளியாகும்…

2 months ago

ஈரமான ரோஜாவே கேபி சன் டிவியில் நடிக்கும் புதிய சீரியல்… ஹீரோ யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டு சமீபத்தில் முடிவடைந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த நிலையில் இந்த…

2 months ago

Thengai Laddu Recipe: உங்க வீட்டில் தேங்காய் இருக்கா? அப்போ சுவையான தேங்காய் லட்டு செய்து பாருங்கள்…

Thengai Laddu Recipe: நாம் உண்ணும் உணவுகளில் அறுசுவைகள் உள்ளன. துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை அறுசுவைகள் ஆகும். இவற்றில் குழந்தைகள்…

2 months ago