Homeதொழில்நுட்பம்திடீரென குறைந்த பிரபல Oneplus போனின் விலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

திடீரென குறைந்த பிரபல Oneplus போனின் விலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று தான் ஒன்பிளஸ். இந்த நிறுவனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் கூறவேண்டும். அதற்கு ஏற்றாற்போல இந்த நிறுவனமும் தொடர்ந்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் இதற்கு முன்னர் அறிமுகமாகியுள்ள போன்கள் மீதும் பல சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதுப்போல தான் தற்போது இந்த ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரபல போன் ஒன்றின் விலையை (Oneplus Phone Price) அதிரடியாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த தகவலின் படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மாடல் போன்களில் ஒன்றான OnePlus Nord CE3 Lite 5G போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த போன் பல்வேறு புதிய அம்சங்களுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முக்கியமாக இந்த போனில் 108எம்பி கேமரா வசதி உள்ளது. அதுமட்டுமின்றி 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் போன் (Lowest Price OnePlus Phones) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மாடல் ஒன்பிளஸ் போன் கேமிங் விரும்பும் பயனர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது போன்ற பயனர்களை கவர்வதற்காக தான் அட்ரினோ 619 ஜிபியு வசதியை இந்த ஒன்பிளஸ் போன் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற அசத்தலான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த போன் வெளியானது முதலே இதில் முக்கிய அம்சமாக பார்க்கபபட்டது இதன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே தான். அதுமட்டுமின்றி 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் என பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. இது போன்ற பல முக்கிய அம்சங்களுடன் வெளியான இந்த போனின் விலை தான் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord CE 3 Lite 5G Phone Price

இந்த ஒன்பிளஸ் போனின் விலை (OnePlus Nord CE 3 Lite 5G Phone Price) பிளிப்கார்ட் தளத்தில் 13 சதவீதம் தள்ளுபடியுடன் விற்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த போன் தற்போது ரூ.17,249-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கும் போது இதன் விலையில் ரூ.1500 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையும் சேர்ந்தால் இந்த போனை நாம் வெறும் 15,749-க்கு வாங்கிவிட முடியும். இதுப்போன்ற போன் வாங்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த OnePlus Nord CE3 Lite 5G Phone Vilai Kuraippu சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: Best Ac 2024: ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! Xiaomi- யின் அசத்தலான AC + Heater மாடல்..!
Jayasri C
Jayasri Chttps://infothalam.com/
நான் ஜெயஸ்ரீ, நான் Infothalam.com இணைய தளத்தில் எழுத்தாளராக பணியாற்றி வருகிறேன். தமிழ் மீதும் கட்டுரைகள் எழுவதில் உள்ள ஆர்வத்தால் நம்முடைய Infothalam இணையத்தளத்தில் சமையல் குறிப்பு, நாட்டு நடப்புச் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்ற இன்னும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
RELATED ARTICLES

Most Popular