தமிழகத்தில் மக்களவை தேர்தல் களைகட்ட தொடங்கியுள்ளது. ஆங்காங்கே கட்சியினர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பணிகள் தமிழகத்தில் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சிகள், தனித்து போட்டியிடும் கட்சிகள் என அனைத்து கட்சியினரும் மாறி மாறி பிரசாரங்கள் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களை கவரும் விதமாக கட்சியினர்கள் தங்கள் கட்சியின் நடிகர்களை பிரசாரங்களில் கலந்துக்கொள்ள வைப்பதும் தேர்தல் களத்தில் (ADMK Pracharam 2024) ஒரு ஆர்வத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டும் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு (Ganja karuppu therthal pracharam) தனது குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்று அக்னி சட்டியுடன், பால்குடம் எடுத்து பிராத்தனை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சியில் அமைக்க வேண்டியும், அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டியும் தான் குடும்பத்துடன் சமயபுர மாரியம்மனை பிராத்திக்க வந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவின் சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்ததே பெரிய விஷயம். அவரின் தலைமையிலான அரசு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும். திருச்சியில் போட்டியிடும் (Ganja karuppu petti 2024) அதிமுக வேட்பாளரும் வெற்றி பெற பிராத்திக்கிறேன் என அவர் கூறினார்.
மேலும் நான் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பிராச்சாரம் செய்துக்கொண்டு இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை பாதம் தாங்கிய பழனிச்சாமி என்று நகைச்சுவை செய்துக்கொண்டு தான் இருப்பார்கள். வெற்றி பெற பிறந்தவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று கூறினார்.
எடப்பாடி பழனிச்சசாமி ஒரு விவசாயி அவருக்கு விவசாயிகளின் கஷ்டம், நஷ்டம் தெரியும். எடப்பாடி பழனிசாமியிலான அரசு எப்போதும் தனித்து நின்று தான் போட்டியிடும். அதிமுக ஒற்றை பரம்பரை யாருடனும் கூட்டணி அமைத்த பழக்கம் இல்லை. எனவே பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும். வெற்றியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி போன்று வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாதம் தாங்கிய பழனிசாமி..! பிரச்சாரத்தில் உதயநிதி பேச்சு..! |