Homeசினிமாரசிகர்களுக்கு காத்திருக்கும் பிரேமலு 2 வது பாகம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிரேமலு 2 வது பாகம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் தான் பிரேமலு. இந்த படம் மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் பெரியளவில் கவர்ந்துள்ளது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் (Premalu Movie Part 2) தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் உட்பட அனைத்து படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், பிரம்மயுகம் போன்ற மலையாள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய வெற்றிபடங்களாக மாறி வருகிறது.

இந்த படங்களின் பட்டியலில் அதிக வசூல் சாதனை படைத்த திரைபடமாகளில் பிரேமலு படம் உள்ளது. இந்த படத்தில் நடிகர் நஸ்லென் கே கஃபூர், நடிகர் மமிதா பைஜு இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன், மீனாட்சி ரவிந்திரன், அல்தாஃப் சலீம், அகிலா பார்கவன் போன்ற பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு காதல் கலந்த நகைச்சுவை படம் ஆகும். இதன் காரணமாகவே இந்த படம் வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.

பிரேமலு படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரேமலு படத்தின் இயக்குனர் கிரிஷ் ஏடி, பிரேமலு படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த பாகம் வரும் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் (Premalu Movie Second Part Update) மிகவும் வேடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.

Premalu Movie Update
மேலும் படிக்க: மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல… Manjummel Boys OTT Release Date அறிவிப்பு..!
Abinaya G
Abinaya G
வணக்கம்.. நான் அபிநயா. நமது infothalam.com இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக அனைத்து துறை தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் வண்ணம் எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி.
RELATED ARTICLES

Most Popular