அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாளம் படம் தான் பிரேமம். இந்த படத்தில் அனுபாமா, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி ஆகியோர் புதிதாக அறிமுகமானார்கள். இந்த படத்தில் மலர் டீச்சராக வரும் மலர் காதாபாத்திரத்தில் நடித்த சாய்பல்லவி, மற்றும் மாணவராக நிவின் பாலி நடித்துள்ளாா். மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியின் கதாபாத்திரத்தில் தோற்றம், நடிப்பு, தமிழ் உச்சரிப்பு என அவரது கதாபாத்திரம் மலையாள ரசிகர்களை மட்டும் கவராமல் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்துள்ளார்.
தனது முதல் படம் மலையாளம் என்றாலும் அவர் தெலுங்கு படத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தமிழ் படங்களில் ஒரு சில படங்களில் நடத்து வருகிறார். அவர் தற்சமயம் தெலுங்கில் நாக சைதன்யாவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கேஜிஎஃப் புகழ் யாஷ் நடித்து, மோகன்தாஸ் கன்னடத்தில் இயக்கும் படத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சாய் பல்லவி பெரும்பாலும் அவருக்கு கதை பிடித்திருந்தால் மட்டும் தான் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம். அதனால் தான் அவர் பெரும்பாலான தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. சமீபத்தில் கூட சந்திரமுகி 2 திரைப்படத்தில் கங்கணா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைப்பதாக திட்டம். ஆனால் அந்த கதை சாய் பல்லவிக்கு பிடிக்காமல் போக அவர் மறுத்துவிட்டாராம். அவர் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் Premam படத்தில் நடித்த நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து ஒன்றாக மலையாளப் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இணைந்து நடிக்கும் இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிபதிவாளர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்கப்படுகிறது.