கோடை காலம் இன்றும் தொங்கிய நிலையிலும் சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் நிலவி வருகிறது. வரும் காலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நிலையில் வெயில் காரணமாக தண்ணீர் இன்றி செடி மற்றும் மரங்கள் வடி வருகின்றன. இதனால் காய்கறி உற்பத்தியும் குறைந்து வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது.
கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிப்படைகின்றன. அதிகப்படியான வெப்பம்காரணமாக தண்ணீர் இன்றி செடி கொடிகள் மற்றும் மரங்கள் அனைத்தும் வாடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் விளைச்சலும் பாதிப்படைகிறது.
விளைச்சல் குறையும் போது உணவுக்கு தேவையான காய்கறிகளின் வரத்தும் குறைந்து அவற்றிற்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்து (Kaikarigal Vilai Nilavaram) வருகிறது.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பணைக்கு வருவது வழக்கம். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து இடங்களிலும் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. மேலும் ஏற்கனவே கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளும் வெயில் காரணமாக வாடி வீணாகி வருகிறன்றன.
இந்த காய்கறி விளைச்சல் பாதிப்பால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. காய்கறிகள் கிலோவிற்கு ரூபாய் 10 முதல் ரூபாய் 30 வரை விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய காய்கறி விலை நிலவரத்தின் படி 1 கிலோ பீன்ஸ் ரூபாய் 160, எலுமிச்சை மற்றும் இஞ்சி ரூபாய் 140, பட்டாணி ரூபாய் 100 மற்றும் பூண்டு ரூபாய் 150 க்கும் விலை உயர்ந்து (Kaikarigal Vilai Uyarvu) விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் சின்ன சேனைக்கிழங்கு ரூபாய் 68, வெங்காயம் கிலோ ரூபாய் 50, கேரட் ரூபாய் 50, பச்சை மிளகாய் ரூபாய் 45 மற்றும் வெள்ளரிக்காய் ரூபாய் 30 போன்று பல காய்கறிகளின் விலை வெய்யில் காரணமாக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என்பதால் காய்கறிகளின் வரத்தும் பாதிக்கப்படும் என ஐயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு… அதிர்ச்சி தகவல்..! |