சன் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல் தான் ரோஜா. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. ரோஜா சீரியலுக்கு (Roja Serial Actress Priyanka Nalkari) பிறகு இவர் சீதா ராமன் என்ற சீரியலில் நடித்தார். அதன் பிறகு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. தனது நீண்ட நாள் காதலரான தாெழிலதிபரை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இவரின் காதலுக்கு வீட்டார் சம்மதம் தெரிவிக்காததால் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலை கரம் பிடித்தார்.
பிரியங்கா நல்காரின் கணவர் மலேஷியாவை சேர்ந்த தொழிலதிபர் என்பதால், மலேஷியாவிலேயே பிரியங்கா நல்கார் தங்கிவிட்டார். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நளதமயந்தி சீரியல் மூலம் நடிக்க வந்தார். இவர் அவ்வப்போது சென்னை டூ மலேஷியா என மாறி மாறி போய்க்கொண்டிருந்தார்.
பிரியங்கா நல்கார் தனது காதல் கணவருடன் உள்ள புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவேற்றி கொண்டிருந்தார். இந்நிலையில் தான் திடீரென்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து தனது கணவருடன் உள்ள புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கினார் பிரியங்கா. இதனால் இவரை பின்தொடந்தவர்கள் திருமணம் ஆகி 1 வருடம் ஆகவில்லை அதற்குள் இருவருக்கும் இடையில் எதுவும் பிரச்சனையா, இருவரும் விவாகரத்து செய்ய போகிறார்களா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதனை எல்லாம் கண்டுக்கொள்ளாத பிரியங்கா நல்கார், மெளனம் காத்து வந்தார். இந்த சர்ச்சை பேச்சுக்கு முற்றி புள்ளி வைக்கும் விதமாக தனது பிறந்த நாளை கணவருடன் கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.பிரியங்கா நல்கார்க்கு அவரது கணவர் (Roja Serial Actress Priyanka Nalkari Husband) சர்ப்ரைஸாக கேக் வெட்டி மனைவியின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இதற்கு பிரியங்காவின் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரித்துள்ளனர்.