கோடை காலம் தொடங்கி மக்களை நாம் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கோடை வெயிலில் நம்மில் பலர் விரும்பி உண்ணும் ஒரு பொருள் தான் தயிர். இதனை நாம் பல விதமான தினந்தோறும் பயன்படுத்தி வருகிறோம். இதனை உண்பதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என்று நாம் நினைத்து தினந்தோறும் அதனை சாப்பிட்டு வருகிறோம். ஆனால் தினந்தோறும் சாப்பிடுவதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. Curd Disadvantages in Summer குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
நாம் இந்த கோடை காலத்தில் நம் உடலை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள தினந்தோறும் உணவில் தயிரை சேர்த்துக் கொள்கிறோம். இதை தான் பலர் அறிவுறுத்துகிறார்கள். தயிரில் அதிக அளவு புரோபயாடிக்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன. அதுமட்டுமின்றி புரதம், கால்சியம், வைட்டமின் B மற்றும் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன.
தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாகும் என்பதை விட தயிர் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பது தான் உண்மை. ஆனால் தயிரில் புளிப்பு சுவையும் சூட்டை அதிகரிக்கும் தன்மைகளும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே தயிர் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் தயிரில் கபமும் பித்தமும் அதிகமாகவும் வாதம் குறைவாகவும் இருக்கிறது. எனவே அதனை நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தயிர் உட்கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து (Curd Advantages And Disadvantages) இனி பார்க்கலாம்.
கோடையில் அதிகமாக தயிர் சேர்த்துக் கொண்டால் உடலில் வெப்பம் அதிகமாகி சிலருக்கு முகப்பருக்கள், தோல் அலர்ஜி, செரிமானப் பிரச்சனைகள், உடல் சூடாவது போன்றவை ஏற்படுவதாகவும் அதிக அளவிலான வாய்ப்புகள் உள்ளது.
எனவே இந்த கோடைகாலத்தில் தினமும் தயிர் எடுத்துக்கொள்வதற்கு பதிலாக மோரை அருந்தலாம். இதுபோல தயிருக்கு பதிலாக மோரை அருந்தும் போது எந்தப் பிரச்சனையும் இருக்காது. அதுமட்டுமின்றி மோரில் உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து பருகுவதன் மூலம் உடலுக்கு மிகவும் நல்லது. தயிரோடு தண்ணீரை சேர்க்கையில், அதிலிருக்கும் வெப்ப தன்மை சமனாகிறது. தண்ணீர் சூட்டை குறைப்பதோடு தயிரின் குளிர்ச்சியையும் அதிகரிக்கிறது. ஆகையால் கோடைக்காலத்தில் தயிர் (Curd Benefits) சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் மோர் பருகலாம்.
இதையும் படியுங்கள்: காலில் கருப்பு கயிறு கட்டி இருக்கீங்களா..! அப்போ இதை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..! |