பிறந்தது முதல் திரைதுறையில் இருப்பது சில நடிகர்கள் அவர்களில் முக்கிய இடம் பிடித்து இருபவர் என்றால் நடிகர் சிம்பு. இவர் தனது ஒரு வயது முதல் இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் ஆரம்பம் முதல் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். எனினும் இடையில் சில ஆண்டுகள் இவருக்கு கடினமானதாகவே இருந்துள்ளது.
இந்நிலையில் தான் இவர் மாநாடு என்னும் படம் மூலம் ரீஎன்ட்ரிக் கொடுத்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த பத்து தல படமும் இவருக்கு வெற்றியை அளித்தது. இந்நிலையில் தான் தற்போது இவர் தனது அடுத்தப்படத்தில் (Simbu Next Movie) நடித்து வருகிறார். இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டுதான் உள்ளது.
இந்த படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்பு இப்போது பெயர் வைக்கப்படாத STR 48 படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் கதாபாத்திரத்திற்காக இவர் ஒரு வருடத்திற்கும் மேல் தன்னை தயார் செய்து வருகிறார். மேலும் சிம்புவின் இந்த அடுத்தப்படம் (STR Next Movie) ஒரு பீரியட் ஃபேன்டஸி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த STR 48 படம் சுமார் ரூ.100 கோடி செலவில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. மேலும் இந்த படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. இந்நிலையில் தான் நேற்று இந்த படத்தின் அறிமுக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது.
இந்த வீடியோவில் போர் வீரர்கள் பலர் கூடி நிற்கும் போது, குதிரைகள் கனைக்கின்றன, இந்த சத்தத்திற்கு நடுவே சிம்பு நடந்து வருவது போல ஒரு வீடியோ தான் அது. இதனை நடிகர் சிம்பு தான் தனது இணையப்பக்கதில் வெளியிட்டு இருந்தார். ஆனால் இது படத்திற்கான வீடியோவா அல்லது வேறெதும் வீடியோவா என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் அந்த வீடியோவிற்க கிழே இது என்னவென்று தெரிந்து கொள்வதற்காக காத்திருங்கள் என்று சிம்பு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Excited about this one! StayTuned…
— Silambarasan TR (@SilambarasanTR_) February 26, 2024
🔜 pic.twitter.com/p2sgSyaeXQ
இதையும் படியுங்கள்: பஞ்சு மிட்டாயை தொடர்ந்து ரோஸ் மில்கிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனம்..! |